Thursday, 10 June 2021

விடுதலைப் புலிகள் பற்றிய சுமத்திரனின் விமர்சனம்.2 மார்ச் 2020

கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார்.

 விடுதலைப் புலிகள், சகோதர இயக்கங்களை அழித்து ஜனநாயகப் படுகொலையை புரிந்துதான், தனி இயக்கமாக உருவாகினார்கள் என்று பேசியவர் சுமத்திரன் . அதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கம்மீது இலங்கை அரசாங்கம், சுமத்துகின்ற பல பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்துகின்றவர் சுமத்திரனின்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் - பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக - இறுதியாகவும் தனித்தும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே இவ்வாறு 'சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டதாக' சுமந்திரன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்த காலத்தைக் கடந்து வந்த கட்சியாகும். யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி, செயலிழந்திருந்த கட்சி. திடீரென்று ஜனநாயகப் பண்புகள் வந்து விடாது; அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஏனென்றால் 30 வருடங்கள் வேறு விடயத்துக்குப் பழகிப் போய்விட்டோம். அது, சொல்வதைச் செய்வதாகும்".


சுமந்திரன் என்ன சொன்னார்?

"யுத்த காலத்தில் பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன. ஒன்று மட்டும் இருக்கவில்லை. அது ஒன்றாக வந்தது எப்படியென்று எல்லோருக்கும் தெரியும். சகோதரப் படுகொலை மூலமாகவே, அது ஒன்றாக வந்தது. ஆனால், ஜனநாயக வழியில் அப்படியெல்லாம் நாம் செய்ய முடியாது" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதன்போது மேலும் தெரிவித்தார்.

புலிகளின் அடையாளத்துடன் அவர்களின் கைகாட்டல்களினால் ஆசனங்களை வென்று, அதில் கிடைத்த வட்டியாக, தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராகி, விடுதலைப் புலிகளைப் பற்றி தேர்தல் காலத்தில் பேசி உறுப்பினராகியவர்.

தேர்தல் வந்தால் தலைவர் பிரபாகரனைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் புகழந்து பேசுவதும், தேர்தல் முடிந்த பின்னர், புலிகளைப் பற்றி ‘இல்லாதது பொல்லாதது’ பேசுவதும் இவர் கையாளுகின்ற உத்தி. எல்லாம் நிற்க. விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து, பதவி சுகத்தை மாத்திரம் அனுபவித்தவர் சுமத்திரன்.



இன்னொரு பிரபாகரன் தேவையா இல்லையா என்பதை தென்னிலங்கை தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் வந்து நடத்துகின்ற கூட்டங்களில் பேசுவாா். இதைப்போல இன்னொரு சமயத்தில் இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணை நடத்துகின்ற அதேவேளையில் புலிகள் இழைத்த போர்க் குற்றங்கள்மீதும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று பேசியவர்.

No comments:

Post a Comment