Tuesday, 15 June 2021

தமிழின் வாழ்வியல் நெறிகளை திருடி உருவாக்கப்பட்ட அன்னிய கோட்பாடுகள்.

தமிழின்   வாழ்வியல் நெறி கோட்பாடுகளை கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோ , லெனின், மாசேதுங்,  சே குவேரா   போன்றவர்கள்  தமிழில் இருந்து திருடி கம்யூனீச சோசலீச ,லெனினிய ,மாவோயிச போன்ற கோட்பாடுகளை உருவாக்கி இருந்தாா்கள். இதற்காகவே தமிழை பலமொழிகளில் மொழிபெயர்தாா்கள். 

"எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே என்பதனை உணர்ந்து கொண்ட தமிழர்கள்  சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கைகள் ஊடாக ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பினை பதி பசு பாசத்தின் ஊடாக விளக்கம் கொடுத்தும்  எல்லா உயிர்க்கும் அன்பு செலுத்துதல் வேண்டும். என்பதற்காகஅன்பே சிவமாகவும்   எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக உயிர் நேயம் பேசி ,   சகலவிதமான ஏற்றத்தாழ்வுகள்  அற்ற சமத்துவமான நெறிகளை கொண்ட மேன்மை கொள் சைவ நீதியின் ஊடாக ஆன்மாவை தெய்வீகமாக மாற்றுகின்ற  வாழ்தலுக்குரிய தவமே வாழ்வாகவும்  வழிபாடுகளாகவும்  கொண்டும்  அட்டமாசித்திகள் கூடிய ஆன்மீக பலத்துடன்   ஜனநயாக வழிகளில் எதுவிதமான கட்டுபாடுகளும் அற்ற சுதந்திரமான வழியில் தமிழ் மக்கள் தமது வாழ்வியல் நெறிகளுடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்" .

தமிழும் தமிழர்களின் தொண்மை வாய்ந்த வரலாறுகளை கொண்ட சங்க இலக்கியங்கள், வாழ்வியல் நெறிகளை பேசுகின்ற சைவத் திருக்குறள், நீதி நூல்கள்,  அகநானூறு,  புறநானூறு, வாழ்வின் பல்வேறு கூறுகளையும் வாழ்வியல் நெறிகளையும்,  தமிழர்களின்  வீரகாவியங்களையும்   தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. 

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்ற  பல்வேறு வரலாறுகளை  தமிழ் இலக்கியங்கள்  பேசுகின்றன.

உலகிற்கு தோழர் அத்துடன் நண்பர் என்பதற்கு விளக்கம் கொடுப்பதற்கு இறைவனைத் தமது தோழனாகவும் நண்பராக்கிக் கொண்டவர் சுந்தரமூர்த்தி நாயானார்.

 கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்கள் தமிழிருந்தே தோழர் என்ற சொல்லை திருடிக் கொண்டாா்கள்.அதேபோன்று தங்களின் கம்யூனீச,சோசலீச ,லெனினிய ,மாவோயிச கோட்பாடுகளை தமிழின்   வாழ்வியல் நெறி கோட்பாடுகளையும்   சைவத் திருக்குறளையும் திருடிகலந்து இரண்டையும் ஒன்றாக கலந்து அதிலிருந்து தமிழை நீக்கி தங்களின் மொழிகளை செருகி தங்கள் தங்கள் கோட்பாடுகளை உருவாக்கி கொண்டாா்கள்.

அத்துடன் தங்கள் தங்கள் கொள்கைகளை நிறுவுவதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு  ஜனநயாகத்தை படுகொலை செய்து பலஇலட்சம் மக்களை கொலை செய்து எருவாய் மண்ணில் புதைத்தாா்கள்.

தமிழ் இலக்கியங்களை படிக்காதவர்கள், தமிழை அறியாதவர்கள், கிறிஸ்தவChurch  களில் பாதிரிகளின் உசுப்பேத்தும் பிரசங்கத்தை கேட்டவர்கள்   சேகுவேரா  புரட்சி,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோ , லெனின், மாசேதுங் போன்னவர்களின் சிந்தனை புரட்சி என்றும் அவர்களின் சிந்தனைகள் துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் என்று புலம்பியிருந்தாா்கள்.

சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ்  ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தமிழ் ஈழ இயக்கங்களுக்குள்  வர்க்கப் போராட்டம்  பல ஸ்ரைல் (style) வடிவங்களில்  நடைபெற்றன. 

மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style)  என பல பிரிவுகளாக பிளவுபட்டிருந்தாா்கள்.

இவ்வாறு    பிளவுபட்டு இருந்தவர்கள் தங்கள் தங்கள் அதிகாரங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தங்களின் சிந்தனைகளை மற்றவர்களின் மீது திணிப்பதற்காகவும் துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்றுக் கூறிக் கொண்டு பல களையெடுப்புகளையும்,  உட்கட்சிப் படுகொலைகளையும் நடாத்தி முடித்து இருந்தாா்கள். அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலானவர்க்க முரன்பாடுகளின் காரணமாகவே நடைபெற்றன.

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய மாவோயிஸ்ட்கள்,  சோஷலிஸ்ட்கள்,   லெனிஸ்டுகள்   ஜனநயாகத்தை குழிதோண்டி புதைத்தும் பல ஆயிரம் தமிழர்களை கொலை செய்து எருவாய் மண்ணில் புதைத்தாா்கள்.

ஈழபுரட்சி போன்று 1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல  40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள்.

சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது. ஏனெனில் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம், இஸ்லாமியம் என்று கூறிக்கொண்டு கிறிஸ்தவ மிசனறிகளின் பாவாடைகளைப் பிடித்ததுக் கொண்டு சிவ பூமியை பிளக்க முயன்றார்கள் அவர்கள் முள்ளிவாய்க்காலில் மாண்டதைத் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை.  அத்துடன்   இறை சத்தியினால் மறைத்து விட்டார்கள். அதேவேளைபல இலட்சம் தமிழர்களையும் அழித்தே இருந்தாா்கள்.

சூடு கண்ட பூனை அடுப்பம் கரையை நாடாதது போல் இனியும் தமிழ் மக்கள்உலகினால் தோற்கடிக்கப்பட்ட லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிச   வெற்று  கோசத்திற்கு  பின்னால் சென்றால் நீங்கள் ஒரு போதும் மீண்டு வர முடியாத முள்ளிவாய்க்காலை சென்றடைவீர்கள்.

திருக்குறள் மூலம்  சமத்துவ தமிழ் சமுதயத்திற்கு வித்திட்டவர் சைவத் திருவள்ளுவர்.

சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல்.


சைவத் திருவள்ளுவர் அருளிய தமிழர் (பொருளாதாரம்) பொருளியல்.

திருக்குறளில் மனித உரிமைகள்.


திருக்குறள் கூறும் அரசியல்.

திருக்குறளில் உணவு உரிமை, உழைப்பின் மேன்மை, பொருளாதார உரிமை, வாழ்வதற்கான உரிமை.




No comments:

Post a Comment