Sunday, 6 June 2021

நீயும் தமிழிச்சியா?

 தமிழ்தேசியத்தின் மங்களம் நிறைந்தும்  அருள் நிறைந்ததுமான கலாச்சார பண்பாட்டு தேசிய உடையும், நெற்றியில் திருநீறும் பொட்டும் தலை விரிகோலமற்ற தலையில் சூடியிருக்கின்ற பூமாலை இவைகள் அனைத்தும் இனைந்தே  பாா்வைக்கு மட்டுமே தமிழிச்சி என்று அடையாளப்படுத்துகின்ற தெய்வீக அடையாளங்களாகும்.

ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால் அது, நாம் நமக்கு வைத்துக் கொள்ளும்   பிறமொழி கலப்படமற்ற சுததமான தமிழ் பெயர் ஆகும்.

பெயரே பெயர்கள் சாதாரணமானவை அல்ல. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை கேள்விப்படும்போதோ அல்லது அந்தப் பெயரை எவராவது உச்சரிக்கும்போதோ பழைய ஞாபகங்கள் நம்மை சூழும்.

 பெயர் என்பது நம் ஆதி முதல் அந்தம் வரை பலராலும் உச்சரிக்கப்படுவது. எனவே பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் வாழ்வோடு இணைந்திருப்பது பிறமொழி கலப்படம் அற்ற தமிழ்மொழி பெயர் மட்டுமே. 

பிறமொழி கலப்படம் அற்ற தமிழ்மொழியால் தன்னை அடையாளப் படுத்தாமலும்   குழந்தைகளுக்கு பிறமொழி கலப்படம் அற்ற நம் தாய் மொழி தமிழிலேயே சூட்டாமல்  பிறமொழிகளை பெயா்களை சூட்டுவது என்பதும் ஒரு வம்சத்தின் அடையாளத்தை , ஒரு குலத்தின் அடையாளத்தை , ஒரு இனத்தின் அடையாளத்தை,  ஞாணிகலின் நாவில் நந்தணம் ஆடிய தமிழை இழிவுபடுத்துவதாகும்

தலைவிரி கோலமாய் (அலைபாயும் கூந்தல்)  காட்சி தரும் பெண்களுக்கு இலட்சுமி கடாட்சம் கிடைக்காது. ஆகவே பெண் தலைவிரிக் கோலம் ஸ்ரைல் (style) அல்ல தரித்திரம். அது மட்டுமல்ல தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டால் சனி பகவனுக்கு பிடிக்கும். ஆக சனி  பகவன்  பிடித்து கொள்வார்.

தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்ற தமிழ் குடும்பங்களுக்குள் தலைவிரி கோல  (அலைபாயும் கூந்தல்) பெண்கள் திருமணம் செய்து கொண்டு உள்ளே சென்றால் தமிழ் கலாச்சார பண்பாடுகளுடன் வாழுகின்ற தமிழ் குடும்பம் நாசம். இவ்வாறு நாசமாய் போன குடும்பங்களை இன்று நாம் நேரடியாகவே காணமுடிகின்றது.

சிவபூமிதேசத்தில் தமிழ் கலாச்சார பண்பாடுகள் நிரம்பிய யாழ்பாணத்தில்  தலைவிரி கூந்தல்  (அலைபாயும் கூந்தல்)  ஒரு ஸ்ரைல் (style) என்று தமிழ் கலாச்சார பண்பாட்டு மூடநம்பிக்கை என்று கூறிக் கொண்டு நிராகரிப்பாளர்களான   கிறிஸ்தவ, லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற கோட்பாட்டு வாதிகளின்  குடும்ப பெண்களின் தலைவிாிகோலம் ஈழயுத்தத்தை உருவாக்கி அவர்களையே நாசம் செய்து அழித்தது.

கண்ணகி தன் தலைவனை இழந்து தலைவிரி கூந்தலுடன் பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள். தன் கற்பின் சிறப்பால் பாண்டிய மன்னனுக்கும் நாட்டிற்கும் தண்டனை கொடுத்தாள்.

மகாபாரத்தில் பாஞ்சாலியின் தலைவிரி கூந்தல் ஒரு மாபெரும் யுத்தத்தையே நடாத்தினை நடாத்தி பல அழிவுகளை பெற்றுக் கொடுத்து முடித்தது. 

அலைபாயும் கூந்தலுடன் ஆலயத்தில் விளக்குகள் ஏற்றுவதும் வீடுகளில் விளக்குகள் ஏற்றுவதும் தரித்திரம்.

ஆலயங்களுக்கு தலைவிரிகோலமாக செல்லும் போது தலைமுடி ஒன்று ஒரு ஆலயபிரகாரத்துக்குள் விழுந்தால் கூட பாவம். அத்துடன் ககற்பூரசட்டி குத்து விளக்குகளில் இருந்து நெருப்பு இலகுவாக பற்றக் கூடிய ஆபத்துக்கள் நிறைய உண்டு.

சகுன பலனின் படி தலைவிரி கோலமாய் வரும் பெண்ணை கனவிலோ, நேரிலோ காண்பதும் அசுபம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

சமைக்கும்போதும், பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் தலைவிரி கோலத்தை தமிழ் கலாச்சார பண்பாடு தவிர்க்க கோருகின்றது. 

 உங்களின் தலைமுடி ஒன்று ஒரு நிலத்தில் விழுந்தால் அதனை எடுத்துக் கொண்டு பல தீய செயல்களை செய்வதற்கு கயவர்கள் முயற்சிகளை செய்து உங்களை வீழ்த்துவாா்கள்.

தமிழ்தேசியத்தின் மங்களம் நிறைந்தும்  அருள் நிறைந்ததுமான கலாச்சார பண்பாடுகளையும் அதன் அடையாளங்களையும் நிராகாிக்கின்ற தமிழிச்சிகள் உண்மையான வெளிப்படையான தமிழின அழிப்பாளர்கள் இவர்களை இனம் கண்டு தமிழர் சமுதாய்தில் இருந்து ஒதுக்குதல் வேண்டும் இல்லையேல் உங்ளின் குடும்பம் நாசம்.



தமிழ்தேசியத்தின் மங்களம் நிறைந்தும்  அருள் நிறைந்ததுமான கலாச்சார பண்பாட்டு தேசிய உடையும், நெற்றியில் திருநீறும் பொட்டும் தலை விரிகோலமற்ற தலையில் சூடியிருக்கின்ற பூமாலை இவைகள் அனைத்தும் இல்லாதவர்கள்,   தலைவிரி கோலமாய் (அலைபாயும் கூந்தல்)  காட்சி கொடுப்பவர்கள், கறுப்பு உடையுடன் காட்சி கொடுப்பவர்கள் அனைவரும் தரித்திரம் பிடித்தவர்கள் ஆகும்.

இவர்களை சௌபாக்கியமான மங்களகரமான காரியம் நடைபெறும் இடங்களிலும், ஆலயங்களிலும் அனுமதித்தால் மங்களகரமான நிகழ்வுகளையும் உங்களையும்  தரித்திரம் பற்றிக் கொண்டு நாசம் விளைவிக்கும். குடும்பங்கள் உடைந்து சிதறுண்டு நாசமாக போகும்.

புலம் பெயர்தேசங்களில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் தரித்திரம் பிடித்த கோலங்களுடன் வாழுகின்ற குடும்பங்கள்  கணவன்-மனைவி இருவரும்  விவாகரத்து செய்து கொண்டவர்களாகவும் அவர்களது பிள்ளைகள் அவர்களைப் போல தறுதலைகளாகவும் பேய்கள் போன்று அலைந்து திாிகின்றாா்கள்.

ஆகவே நம் முன்னோர் செய்தது எல்லாம் மூடநம்பிக்கை அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஞானஅறிவால் கற்றுக்கொண்ட பகுத்தறிவு சிந்தனை ஆகும்.  அத்துடன் தமிழ்தேசியத்தின் மங்களம்நிறைந்த சைவநெறி வாழ்வியலை நிறுவினாா்கள்.







No comments:

Post a Comment