கடந்த பதினொரு வருடமாக தமிழ் மக்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சுமந்திரன் “தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு புலிகளே காரணம்” என்கிறார்.
புதிய அரசியல் சாசனம் நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்று பதவி விலகுவேன் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார்.
அவ்வாறு இல்லாது அரசியல் சாசனம் வெற்றிகரமாக நிறைவேற்றுப் பட்டிருந்தால் கூட தனது கடமை முடிந்து விட்டது. தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தாமாகவே கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாது தனது இராஜினாமா கடிதத்தில் அரைவாசி எழுதி விட்டதாகவும் மிகுதியே எழுத வேண்டியிருக்கின்றது என தன் சட்டைப் பாக்கட்டைக்காட்டி “அந்த ராஜினாமா கடிதம் ரெடியாக இருக்கின்றது என்று கூறினாா். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் சட்டைப் பாக்கட்டைக்காட்டி கூறியிருந்தார்.
இப்போது அவரது இராஜினாமா கடிதத்தின் மிகுதியையும் எழுதி முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
எனவே, சுமந்திரன் கூறியது போல தனது ராஜினாமா கடிதத்தை முழுமைப்படுத்தி உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் அரசியலில் இருந்து விலகவேண்டும்.
No comments:
Post a Comment