MAY.
1--
18-05- 2009 மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள்.
2
2--05-1958 முதல் 22-05-1958 தமிழர் படுகொலைகள்.
வைகாசி வளர்பிறை நான்காம் நாள் வியாழக்கிழமை திருவாதிரை வைகாசி வளர்பிறை ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை புனர்பூசம் வைகாசி வளர்பிறை ஆறாம் நாள் சனிக்கிழமை பூசம் வைகாசி வளர்பிறை ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆயிலியம் வைகாசி வளர்பிறை எட்டாம் நாள் திங்கட்கிழமை மகம் வைகாசி வளர்பிறை ஒன்பதாம் நாள் செவ்வாய்க்கிழமை பூரம் ஆகிய ஆறு நாட்களிலும் 1958 மே மாத தமிழர் படுகொலை நடந்தது.
JUNE தமிழர் படுகொலை.
1--
01-06-1981 நூலக எரிப்பு தமிழர் படுகொலைகள்
வைகாசி தேய்பிறை பதின்நான்காம் நாள் திங்கள்கிழமை கார்த்திகை யாழ்ப்பாண நகரம் எரிப்பு அல்லது பொதுவாக யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பும் தமிழர் படுகொலைகளும்.
2--சங்கிலியன் மறைந்த நாள்.
1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அட்டமி திதி அன்று தமிழர்களின் அரசு வீழ்ச்சி அடைந்து சங்கிலியன் மறைந்த நாள் ஆகும்.
3---
உரும்பராய் சிவகுமாரன் இறப்பு 05-06-1974 வைகாசி தேய்பிறை முதலாம் நாள் நினைவேந்தல்.
4--
05-06-1956 தொடக்கம் 16-06-1956 வரை கல்லோயா தமிழர் படுகொலைகள்.
வைகாசி தேய்பிறை 11-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அசுவினி தொடக்கம் நான்கு நாள்களுக்கு அம்பாறை மாவட்டம் கல்லோயா திட்ட சிங்களவர் 1956 ஜூன் 5 தொடக்கம் 16 வரை தமிழர்களை கொலை செய்தனர் தமிழர் சொத்துக்களைக் கொள்ளை அடித்தனர் கடும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
Black July( 22-07-1983)
கறுப்பு யூலை (Black July) ஆடி 22-07-1983 தொடக்க 2 கிழமை தொடர்சியாக படுகொலைகள் நடைபெற்றது.
ஆடி வளர்பிறை 14ஆம் நாள் சனிக்கிழமை பூராடம் ஆடி முழுநிலா நாள் ஞாயிற்றுக்கிழமை பூராடம் ஆடி தேய்பிறை முதல் நாள் திங்கட்கிழமை உத்திராடம் ஆகிய மூன்று நாள்களிலும் 1983 யூலை தமிழர் படுகொலை உச்ச நிலையில் இருந்தது.
1977 (August ) ஆவணி மாதத்தில் நடைபெற்ற தமிழர் படு கொலைகள்.
ஆடி தேய்பிறை பதின்மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை புனர்பூசம் ஆடி தேய்பிறை பதின்நான்காம் நாள் சனிக்கிழமை பூசம் எனத் தொடங்கி ஆவணி வளர்பிறை ஆறாம் நாள் சனிக்கிழமை சுவாதி வரை ஒன்பது நாள்கள் 1977 ஆவணி கலவரம் நடந்தது.
OCTOBER 31 ST.
பண்டார வன்னியன் 31-10-1811 இல் அவன் இறந்தான் என்ற தகவலே உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண நினைவு கூறல் பின்னர் அறியப்படும்.
No comments:
Post a Comment