1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் இலங்கையின் முதலாவது கிறிஸ்தவ பிரதமரான டான் ஸ்டீபன் சேனாநாயக்க தனது கிறிஸ்தவ மதவெறியையும், சிங்களமொழி வெறியையும் ஒன்றாக திரட்டி பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு இலங்கை குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றி மலையக தமிழர்களின் வாக்குரிமையை பறித்தும், குடியுருமையை பறித்தும் நாடற்றவர் நிலைக்கு மலையக தமிழர்களை தள்ளி முதலாவது தமிழின அழிப்பை நடாத்தி முடித்தாா்.
டான் ஸ்டீபன் சேனாநாயக்காவுடன் கூட்டு சேர்ந்து இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்து 7 லட்சம் மலையக மக்களை நாடற்றவர்கள் ஆக்கி தமிழின அழிப்பை நடாத்தியவர் கணபதி காங்கேசர்( ஜி. ஜி.) பொன்னம்பலம்.
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் இந்த நடவடிக்கையானது தமிழின அழிப்பு ஆகும். குமார் பொன்னம்பலத்தின் தந்தை ஜி. ஜி. பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தாத்தா என்பதும் நினைவு கூறப்படல் வேண்டும்.கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தாத்தாஎவ்வாறு தமிழர்களை அழித்தாரோ அதேபோன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒருபடி மேலேசென்று தமிழின அழிப்பாளர்களுடன் கூட்டு கண்டாா்.
No comments:
Post a Comment