சீனாவின் பொறி வலையத்திற்குள் சிக்குண்டு உள்ளது இந்தியா. இந்தியாவின் காஷ்மீரின் ஒரு குறிப்பிட்ட ஒரு சிறுபகுதியை தனது இராணுவ கட்டுப்பாட்டில் கீழ் கட்டுப்படுத்துகின்றது சீனா காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த இருநாடுகளையும் தனது அதிகார மையத்தில் இருந்து வெளியேற்ற இயலாமல் திண்டாடும் இந்தியா சீனாவின் பிடியில் பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்வான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, ஈரான் போன்ற நாடுகள் வீழ்ந்து உள்ள நிலையானது சீனாவின் பொறி வலையத்திற்குள் இந்தியா சிக்குண்டுள்ளது என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.அதேநேரம் சீனாவின் பிடியில் இருந்து இலங்கையை காப்பாற்றுவது என்பதும் இந்தியா தனது பாதுகாப்பையும் தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்று நீங்கள் நினைப்பதும் மடத்தனம்.
உலகப் பொருளாதாரத்தில் அசுர வேகமாக வளர்ந்து வரும் சீனா இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின் தென் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு அளித்து இருக்கின்றது.
சீன நாடு இலங்கையிடம் இருந்து 1.12 மில்லியன் அமெரிக்க டொலருக்கு குத்தகைக்குப் பெற்று உள்ளது. இதன் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதி சீனாவின் கடற்படைத் தளத்தின் ஆளுமையின் கீழ்வந்து உள்ளது.
ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின் தென் பகுதியில் மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்டதாகும். இதில் 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். இந்தத் துறைமுகம் அந்த மார்க்கமாகச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைக்கக்கூடியது. இதனால் எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும்.
சீனாவின் கனவுத் திட்டமான சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள வீதிகளையும், துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை' திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும். அத்துடன் சீனாவின் முப்படைகளான இராணுவ, கடற்படை, விமானப்படை கூட்டுப் படை தளமாகபயனபடுத்துவதற்கன சகல வசதிகளையும் கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சீனாவின் இராணுவ, கடற்படை, விமானப்படை கூட்டுப் படை தளமாக இப்பகுதி மாறி ஆபத்து உருவாகும் சூழல் எழுந்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணம் கீரிமலையில் தனியார் காணிகளைக் கையகப்படுத்தி அமைத்திருந்த ஜனாதிபதி மாளிகை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கப்படுகின்றது இதன் மூலம் சீனாவின் இராணுவ, கடற்படை, விமானப்படை கூட்டுப் படை தளமாக யாழ்ப்பாணம் கீரிமலையும் மாறியுள்ளது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் யாழ்ப்பாணம் கீரிமலையிலும் சீனாவின் இராணுவ, கடற்படை, விமானப்படை கூட்டுப் படை தளமாக அமைவதனால் அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிரான நேரடியான பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இதன் மூலம் இந்தியா உலகவரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டு அகற்றப்படும்.
இலங்கையை கம்யூனீசத்தின் ஊடாக அடிமைப்படுத்துவதற்காக தொன் நந்தசிறி விஜேவீர என்பவரின் ஊடாக 1971 ம் ஆண்டு ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறியபோது அனைத்துலகம் அழித்தது.
இந்த கம்யூனிச புரட்சியில் தோல்வியை எதிா்கொள்ள முடியாத சீனா சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல்,பொருாதார கோட்பாடுகள் லெனினியம், மார்க்சியம், சோசலிசம், கம்யூனிசம் முற்போக்கு சிந்தனையின் வடிவங்களாக சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்ததை நன்றாக பயன்படுத்திக் கொண்டு தனது உளவு நிறுவனத்தின் ஊடாக கம்யூனீச சிந்தனைகளை விதைத்துக் கொண்டு புரட்சியை தூண்டிவிட்டது. மறுபுறம் லெனினிய, மார்க்சிய, சோசலிச நாடுகள் இலங்கையை அடிமைப்படுத்துவதற்காக தங்கள் தங்கள் உளவு நிறுவனத்தின் ஊடாக புரட்சியை தூண்டி விட்டாா்கள் தங்கள்பிணக்கோட்பாடுகளை நிறுவுவதற்காக .
ஈழபோராட்டம் நடாத்திய அனைத்து குழுக்களும் சைவ நெறிகளை நிராகரித்தவர்கள் ஆகும். தமிழ் அழிவதனால் கிறிஸ்தவமோ அல்லது இஸ்லாமோ அழியாது . ஆனால் தமிழும், தமிழ் போற்றிய ஆலயங்களும் அழியுமாயின் தமிழினம் அழிவது உறுதி. என்பதனை முட்டாள்கள் அறிந்திருக்கமாட்டாா்கள்.
இலங்கையில் நடைபெற்றது போன்று தமிழ்நாட்டில் உருவாக்குவதற்காக கம்யூனீஸ்டுகள் லெனினிய, மார்க்சிய, சோசலிச வாதிகள் முயன்று கொண்டு இருக்கின்றாா்கள் இவர்கள் அனைவரும் அன்னியர்களின் கைக்கூலிகள் ஆகும்.
இந்தியாவை பொறி வலையத்திற்குள் வீழ்த்தி அழிக்கும் சீனாவின் நிகழ்ச்சி நிரல் பாகம்--02
அருளகம்.
No comments:
Post a Comment