மாவீரன் சங்கிலி மன்னனையும் அன்னிய ஆக்கிரமிப்பு படைகளால் கொலை செய்யப்பட்ட தமிழ்மக்களையும் நினைவு கூரும் வகையில் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளும் மௌன அஞ்சலியும் மிகவும் சிறப்பாக இன்று 02-06-2021 நடைபெற்றது.
1619 ஜூன் 5 க்கு சமமான தமிழர் நாட்காட்டியில் வைகாசி மாதம் தேய்பிறை எட்டாவது நாள் பூரட்டாதி அட்டமி திதி அன்று தமிழர்களின் அரசு வீழ்ச்சி அடைந்து சங்கிலியன் மறைந்த நாள் ஆகும்.
ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆலய நிர்வாகத்தின் ஆதரவுடன் ஆலயத்தின் தலைவர் கருணைலிங்கம் அவர்களின் தலைமையில் ஆலய தர்மகர்த்தா சபையினர்களும், ஆலய குருமாா்களும், அடியாா்களும் கலந்து கொண்டனர்.
உலக சைவ பேரவையின் இணைப்பாளர் ச.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் உலக சைவ பேரவையின் நிர்வாகததினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சங்கிலியன் நினைவேந்தல் நாளுக்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் .கத்தோலிக்க ஆண்டு 2009 18ம் திகதி MAY மாதம் முள்ளிவாய்க்காலில் சைவத் தமிழர் போரில் தோற்ற நாள், கணக்கிலடங்காச் சைவத் தமிழ் உயிர்களைப் போரில் பறிகொடுத்த நாள், வைகாசித் திங்கள் தேய்பிறை ஒன்பதாம் நாள் ஆகும். அடுத்த வருடம் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நினைவேந்தல் நடைபெறும் என்பதனையும் தெரிவி்துக் கொள்கின்றோம்.
ஒவ்வொருவருடமும் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் தொடர்ந்து செய்வதற்கு இணக்கம் காணப்பட்டு உள்ளது. கலந்து கொள்ள விரும்புவோா் ஈலிங்கனக துர்க்கை அம்மன் ஆலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
உலக சைவ பேரவை.
No comments:
Post a Comment