நினைவு தூபி அமைத்து அதில் இறந்தவனின் பிணத்தை வைத்து வணங்கி வழிபாடுகள் செய்து அஞ்சலிகள் செய்வது காட்டு மிராண்டித்தனம் . அத்துடன் இறந்தவரின் அடையாளங்களாக ஞாபகச்சின்னம் (நினைவு தூபி ) அமைத்து அதில் சீமெந்து சிலைகளை நிறுவி அந்த கல்லுக்கு மாலைகள் போட்டு அஞ்சலி செய்து வணங்குவது மிராண்டித்தனம். அதேபோன்று இறந்தவனின் படம் வைப்பதும் திறப்பதும் மாலைகள் போடுவதும் போன்ற அனைத்து செயல்களும் செய்வதும் முட்டாள் தனமான காட்டுமிராண்டித்தனம்என்று எழுதியும் பேசியும் வந்தவர்கள் ஈரோடுட்டில் பிறந்த வரும் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய வெங்கட்ட இராமசாமி நாயக்கர், காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி போன்ற திராவிட கோட்பாட்டாளர்கள்.
வெங்கட்ட இராமசாமி நாயக்கர் ,அண்ணாதுரை வழிவந்தவரும் கருணாநிதி யின் மகனும் அன்னிய மொழி பெயரை தாங்கி கொண்டு தன்னை தமிழின அழிப்பு செய்து கொண்டு இருப்பவருமான தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சீமந்து கல்லை கடவுள் என்று வணங்குகின்றார்.
இந்த செயலானது கல்லை வணங்குபவன் காட்டு மிராண்டிகள் என்ற நாத்திக திராவிடத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. அத்துடன் முத்துவேல் கருணாநிதியையும் இராமசாமி நாயக்கரையும் அண்ணாதுரையையும் அவமதிக்கும் செயலுடன் கூடிய திராவிட அழிப்பு நடவடிக்கையாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே தாங்கள் நாத்தீக திராவிடத்தை தூக்கி எறிந்து ஆண்மீக பாதைக்கு வரவேண்டும். இல்லையேல் கல்லை வணங்குபவன் காட்டுமிராண்டிகள். சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபகச்சின்னம் வைப்பது மாலைகள் போடுவது போன்ற அனைத்து செயல்களும் முட்டாள்தனம் என்று கூறிய வெங்கட்ட இராமசாமி நாயக்கர் சிலைகள் அண்ணாதுரையின் சிலைகள் கருணாநிதி சிலைகள் அனைத்தையும் உடைத்து எறிதல் வேண்டும்.
No comments:
Post a Comment