Wednesday, 23 June 2021

உங்களின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடையுமா?

ஒரு நாமம் – ஒரு பெயர்-ஓர் உருவம் – ஒரு வடிவம்-ஒன்றும் இல்லாத இறைவன் தம்முள் தன்னை கண்ட தெய்வீக மனிதனுக்கு  அருளியது தெய்வீக தமிழ். அதேபோன்று தமிழுக்கு அருளியது இடபகொடி.

சிவன் அருளிய தெய்வீக தமிழும் தமிழினதும் தமிழ் கலாச்சார பண்பாட்டு கொடியுமான இடபக் கொடியும் சிவனுடன் என்றும் பிாிமுடியாதவாறு இரண்டற கலந்து சிவமாகவே காணப்படுகின்ற காரணத்தினால் சிவனுடன் தமிழ் கலந்த நிலையே தமிழ்தேசியம் ஆகும்.  சிவன் அருளிய தெய்வீக தமிழ் போற்றிய தெய்வங்களினதும் அடையாளங்கள் தமிழ் தேசியமாகவே வெளிப்பட்டு நிற்கின்றன.

உமை உமையொருபாகனின் கலை கலாச்சார பண்பாடுகள் தமிழுடன் என்றும் பிாிக்க முடியாதவாறு காணப்படுகின்றது.  ஆகவே தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளாக தமிழின் கலை கலாச்சார பண்பாடுகள் காணப்படுகின்றன.

சிவன் அருளிய தமிழை  சிவனிடம் இருந்து பிாித்து சிவனை நிராகரித்து தமிழின அழிப்புகளை செய்கின்றவர்களுக்கும், சைவ வாழ்வியல் நெறியின் கலாச்சார பண்பாடுகளையும், சிவபூமி தேசத்தின் சிவ அடையாளங்களையும், தமிழ் போற்றிய தெய்வங்களின் தெய்வீக அடையாளங்களைஅழிப்பவர்கள் சிவனின் விரோதிகள் இவர்கள் தமிழின அழிப்பாளர்களாகும்.

  தமிழின அழிப்பாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுப்பவர்களும், ஆதரவு கொடுக்கும்படி ஏனையவர்களை தூண்டுபவர்களும்   அவர்களது ஆன்மாவும் உடல்களும் சிவகுற்றம் புரிந்தவர்களாகவே சைவநெறிகள் கூறுகின்றன.

பல வகையாக சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம்  (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து  திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள்   செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே  இறந்தவர்களின்ஆன்மா மோட்சம்  அடையமாட்டாது. 

சிவ குற்றம் செய்தவர்களின் ஆன்மா கர்ம வினைபயனை கவ்விக் கொண்டு பேய்களாகவே அலைவாா்கள் என்பது தமிழர்களின் நெறியியல் கூறுகின்றது.




No comments:

Post a Comment