போர்ததுக்கீசர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயா்களை தொடர்ந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் இலங்கையின் மகாதேசாதிபதியாக (Governor General of Dominion of Ceylon ) ஆங்கிலேயர்கள் தான் அதிகாரத்தில் இருந்தவர்கள்.
இதன் காரணமாக உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் தங்களின் அமைப்புகளின் ஊடாக இலங்கையில் அரசியலில் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும், இந்து பெளத்த மக்களையும் வழிநடாத்துகின்றாா்கள். இதன் காரணமாகவே இந்து பெளத்த சிங்கள மக்கள் என்றும் இல்லாதவாறு பெருமளவு அழிவுகள் சந்தித்தாா்கள்.
அதேபோன்று தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ இன மக்களையும் தமிழ் மக்களையும் வழி நடத்துகின்றன. இதன் காரணமாகவே அனைத்து தலைவர்களும் அரசியல் ஆலோசக்களும் கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர்.
ஆகவே அனைத்து சிங்கள மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களும் தமிழ் மொழி பேசுகின்ற கிறிஸ்தவர்களும் அவர்களது நிறுவனங்களும் தமிழ் சிங்கள மொழிகளை கடந்து மதத்தால் ஒன்று பட்டே இயங்குகின்றாா்கள்.
ஒரு தாயின் பிள்ளைகளான பௌத்தமும் சைவமும் இலங்கையில் பிளவுபட்டு தம்மைத்தாமே அழிக்க இந்த கிறிஸ்தவ மிசனரிகளின் சதியே காரணமாகும்.
இலங்கையில் தமிழர்களையும் பெளத்தர்களையும் மோதவைத்து அழிப்பதற்காகவும் உலக அரங்கில் பௌத்த தர்மத்தை இழிவுபடுத்தவும் பெளத்த மதத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவ தற்காகவும் சிங்கள கிறிஸ்தவ நிறுவன்கள் தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை உருவாக்கி செயற்படுன்றாா்கள்.
அதேபோன்று தமிழ் கிறிஸ்தவ நிறுவனங்கள் பெளத்த பேரினவாதம் என்ற கோட்பாட்டை உருவாக்கி சைவ ஆலயங்களை பெளத்த பேரினவாதம் அழிக்கின்றது, சிங்களம் தமிழை ஆக்கிரமித்து அழிக்கின்று என்று கூறி தமிழர்களை சிங்கள பெளத்த மக்களுக்கு எதிராக திசைதிருப்பி ஏவிமோத வைத்து தமிழின அழிப்புகளை நடாத்திக் கொண்டும், சைவ ஆலயங்களை அழித்துக் கொண்டு, தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு தமிழி அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள் தமிழை கடனாக பெற்று பேசுகின்ற கிறிஸ்தவ நிறுவனங்கள்.
No comments:
Post a Comment