Friday, 16 October 2020

தெலுங்கு பெரியாாின் சாதிய இன வெறி,

  https://jaffnaviews.blogspot.com/2020/10/01.html

ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் ஒரு தமிழின அழிபபாளர் ஆகும் இவருக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இன்றைய தமிழக சீரவழிவுக்கு மூலவேர் இந்த நாயக்கராகும்.

குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டு தமிழின அழிப்பிற்காகவும், பூவோடும் பொட்டோடும் இருந்த தமிழ்தாயின் பொட்டையும் பூவையும் அழிப்பதற்காக பெரியாா் என்று நாமம் சூட்டப்பட்டது தமிழருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பெரியாரிசம் ; ஜாதிகள் ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், இதற்கு நாயக்கரான பெரியாரின் தீர்வு  சாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக் கொள்கையும், பெண் அடிமைத்தனம் ஒழிய ஆண்களைப் போல பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளியே வரவேண்டும், ஆகியவை பெரியாரிசத்தின் கொள்கையின் சாராம்சம்.

சாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக்கொள்கை சாதிகள்                                ஒழிய வேண்டும் என்ற கொள்கையை பெரியார் அவர்கள்தான் முதலில் வலியுறுத்திக் கூறினார் என்று இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.

சாதியப் பிரச்சனை சைவ சமயத்தால் உருவானதல்ல.                             " அன்பே சிவமாக ", “ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” எல்லா ஊரும் எம் ஊர் , எல்லா மக்களும் எம் உறவினரே என்றும் அன்புதான் சிவமாக ,உயிர் நேயம் பேசி , தவமே வாழ்வாக வாழ்தலே வழிபாடுகளாக கொண்டு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். 

திருவள்ளுவர் திருக்குறளில் சாதி என்பது என்ன என்பதை தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார்.  “ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம் ,  இழிந்த பிறப்பாய் விடும்".மேலும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”

மகாகவி பாரதியார்                                                                                                      “சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம்” என்று சொல்லியிருக்கிறானே? 

சிவவாக்கியர்  சித்தர் சாதி பாகுபாட்டை சாடுகின்றாா்.                        சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலோ                                                      பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ                                              காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ-                                 சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே.                                                            

சிவவாக்கியர்  சித்தர் தீண்டாமையை    சாடுகின்றாா்.                          பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா                                       இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ                            பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ                          பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே.

ஔவையார் சாதி பாகுபாட்டை சாடுகின்றாா்.                                            சாதி இரண்டொழிய வேறில்லை ;சாற்றுங்கால்                                           நீதி வழுவா நெறிமுறையின் –மேதினியில்                                                     இட்டார் பெரியோர் ;இடாதார் இழிகுலத்தோர்                                              பட்டாங்கில் உள்ளபடி. 

தமிழர்கள் ஆலயங்களில் வைத்து வணங்கும் ஆழ்வார்களில் , நாயன்மாா்களில்,சித்தா்களில் , ​ சிவன் அடியாா்களனைத்து அனைத்து தொழில்களும் செய்தவா்கள் உள்ளனர்.சாதியப் பிரச்சனை சைவசமயத்தால் உருவானதல்ல.

எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும் - இது பரம்பரையாகத் தொடர்வதும் உண்டு. இந்த அடிப்படை யிலேயே ஒழுக்கமுடைமை குடிமை - இழுக்கம் இழிந்த பிறப்பு ஆகும்.

மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம். நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர் என்ற ஒரு பிரிவும், நீதி, நெறிமுறை தவறி நடக்கும் இழிகுலத்தோர் மற்றொரு பிரிவும் ஆவர்.

இவர்கள் யாரும் சாதியை ஒழிக்க கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்க வில்லையே.சிவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்ளை மறுத்துரைக்கும் பெரியாரிசம் தமிழின அழிப்பாளர்களே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை                                                       நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்                                    துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்                                              சங்கத் தமிழ் மூன்றுந்தா.

தமிழ் போற்றிய தமிழர் தெய்வங்கள்.                                                                'மாயோன் மேய காடுறை உலகமும்                                                                    சேயோன் மேய மைவரை உலகமும்                                                                    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்                                                                      வருணன் மேய பெருமணல் உலகமும்                                                                முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்                                                          சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

மேற்படியாளர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்காததால்தான் சாதி ஒழியவில்லை, அதனால்தான் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தார், என்று வைத்துக்கொண்டால் இப்பொழுது மட்டும் என்ன வாழுதாம்... தெருவுக்கு ஒரு சாதி, சாதிக்கு ஒரு கட்சி என்றல்லவா இருக்கிறது... கடவுளை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? சிவன் அருளிய தமிழே முருகனாக அவதாரம் எடுத்த  பொழுது தமிழுக்கும், தமிழ் போற்றிய சைவ நெறிக்கும் சாதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்.?

மிகுதி பெரியாரிசம் பதிவு 02 இல் தொடரும்.---


No comments:

Post a Comment