* சீத மதிய மெறிக்குந் தழலாலே அருணகிரிநாதர் சீத குளிர்ந்த நிலவு , வீசுகின்ற நெருப்பாலும் சீத சுரந் தீர்க்கும் செம்புனல் பித்தம் போகும்
அகத்தியர் குணவாகடம்
( சீத - குளிர் காய்ச்சல் தீர்க்கும், செம்புனல் பித்தம் - இரத்த பித்தம் - குருதியழல் நோய் போகும் )
* திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) -
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்.
சீத வள வயல் - குளிர்ந்த வயல் சூழ்ந்த ..
* இவ்வாறாக சீதபேதி , சீதள நோய் என சீத என்றால் தமிழில் குளிர்ந்த எனும் அதே பொருளில் பயன்பாடு எல்லை அற்று விரியும்.
* மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் .
இவர் நளனைப் பற்றி =
* சீத மதிக் குடைக்கீழ் செம்மை அறங்கிடப்ப
தாத விதழ் பூந்தாரான் தனிக் காத்தான்
.............................................................. -என்று பாடுவார்.
இப்பாடலில் வரும் ' சீத' எனும் சொல்லின் பொருள் தமிழில் குளிர்ந்த என்பதாகும்.
* தொல்காப்பியர் காலத்தும் முந்தியது ' சீத ' எனும் சொல் ...
ஆக :
*குளிர்ந்த .. குளிர்ந்தவள் எனும் தமிழியல் அடிப்படையிலேயே பூமியில் இருந்து கிடைத்தப் பெண்ணுக்குச் சனகர் மகாராசா , சீத.. சீதா .. சீதை .. என பெயர் சூட்டினார். குழந்தைபேறு இல்லா தன்னை .. தன் நெஞ்சைக் குளிரச் செய்த குழந்தைக்கு சனகர் , சீதா ... சீதை என்று பெயர் வைத்தது வெகு இயல்பு.
* கம்பரோ மிதிலை நகர் இளவரசி என்பதால் சீதைக்கு மைதிலி என கம்பராமயணத்தில் பெயர் சூட்டினார்.
* மிதிலா என்பது தமிழ்ப் பெயர் - மதில் நகர் என்பதையே மதிலா.. மிதிலா = சமசுகிருதம் ஆக்கி , மாற்றி உள்ளனர் .
* சனகர் மகாராசா மகள் என்பதால் சானகி எனவும் ஆனாள் சீதை.
* சீதை தமிழ் மகள்...
* சீதா.. சீத்தா.. சீதை - தூய தமிழ்ப் பெயர் .
No comments:
Post a Comment