தமிழின் உயிா் அச்சரங்கை கொண்டு தமிழர்களினால் ஏதோ ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டு சேமிக்கப்பட்டிருந்த பல அறிய பொக்கிஷங்கள் அழிந்துவிட்டன.
தெலுங்கு பெரியாாின் நாயக்கரிசத்தின் தமிழ் விரோத போக்கினால் புராணங்களும், இதிகாசங்களும் பொய்யும், புனைசுருட்டும் கலந்தவைகள். இவைகள் மனிதர்களின் அறிவை மழுங்கடிக்கின்றன. இந்த கருத்து மிகவும் அபத்தமானது, முட்டாள் தனமானது என்று கூறி புத்தியற்ற தமிழர்களை கொண்டு தமிழை அழிப்பித்தாா் தெலுங்கன்.
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம், தாய்தந்தையே நமது உலகம், என்ற வாழ்வியல் கோட்பாட்டு கருத்தை வலியுறுத்த படைக்கப்பட்ட பகுத்தறிவை மூடநம்பிக்கை என்று கூறினான் தெலுங்கு நாயக்கன்.உதாரணத்திற்கு ஒரு புராணக் கதை ஒன்றை சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.
ஒருமுறை நாரதர் ஒரு பழத்தைக் கொண்டு வந்து, "இது யாருக்குமே கிடைக்காத ஞானப்பழம், இதை நான் உண்பதை விட தாங்கள் உண்பது தான் சிறந்தது" என்று கூறி சிவபெருமானிடம் கொடுத்தார்.
சிவபெருமான், பார்வதி தேவியைப் பார்த்து "உமையவளே நீ என்னை இயக்கும் சக்தியாக, என்னில் சரிபாதியாக இருக்கிறாய், நம்மை அனைவரும் 'அம்மை அப்பன்' என்றுதான் அதாவது அம்மை என்று உன்னைத்தான் முதலில் நிறுத்தி அழைக்கிறார்கள். எனவே இந்தப் பழத்தை நான் உண்பதைவிட நீ உண்பதே மிகவும் சிறப்பு" என்று கூறி அம்மையிடம் தந்தார்.
அதற்க்கு அம்மையும்" நாம் அம்மை அப்பன் ஆகிவிட்டோம். இனி வருங்காலம் நம் பிள்ளைகளின் கையில் உள்ளது. எனவே இதை பிளைகளுக்கே தந்துவிடலாம்" என்று கூறுகிறாள்.
இப்பொழுது ஐயப்பன் தொடர்பாக தெலுங்கு பெரியாாின் கருத்து. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன். எப்படி ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும்? எனவே கடவுள் சம்ந்தப்பட்ட கதைகள் கற்பனை மட்டுமல நம்மை முட்டாளாக்கும் பொய்யான கதைகள்.இவர்களின் பகுத்தறிவு இந்த அளவுக்குத்தான் வேலை செய்யும்.
விநாயகன், முருகன் இருவரில் யாருக்குத் தருவது என்பதில் குழப்பம் வந்தபொழுது, சிவபெருமான் இருவரில் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிராகளோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்.என்று கூறிவிட்டார்.
உடனே முருகனும் உலகை சுற்ற புறப்பட்டான், ஆனால் விநாயகனோ நாரதரைப் பார்த்து "நாரதரே, உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன?" என்று கேட்டான்? நாரதரும் மற்றவர்களும் விநாயகனின் கருத்தை ஆமோதித்தனர்.விநாயகனும் அம்மை அப்பனை சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொண்டான்.அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம், தாய்தந்தையே நமது உலகம் என்ற கோட்பாடே வலியுறுத்தப்பட்டது ஆகும்.
ஆனால் ஐயப்பனின் பிறப்பில் ஒரு வாழ்வியல் கோட்பாடு உள்ளதே அதைப் பற்றி ஏன் இந்த தெலுங்கு பகுத்தறிவு சிந்திக்கவே இல்லை ஏன்? மகிஷி என்ற அரக்கியை அளிப்பதற்காக ஐயப்பன் அவதரித்தார். அதாவது மகிஷி என்ற அதர்மத்தை, மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவால் ஆசீர்வதிக்கப்பட்ட மகிஷி என்ற அதர்மத்தை அழிக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் (ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில்) ஐயப்பன் என்ற தர்மம் பிறந்து, அதர்மத்தை அழித்தது.
அதாவது நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற அளவுக்கு ஒருவ(ளி)னிடம் அதிகாரம் இருக்கும் பொழுது அவன் அல்லது அவள் அதர்மங்களை செயும்போது தர்மம் எந்த ரூபத்திலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் தோன்றி அவனை அல்லது அவளை அழிக்கும்.
எனவே மனிதர்களாகிய நாம் எந்த சூழ்நிலையிலும் அதர்மத்தை கடைபிடிக்கக் கூடாது. அதையும் மீறி அதர்மத்தை ஒருவன் அல்லது ஒருத்தி கடைபிடித்தால் அவனை அல்லது அவளை தர்மம் அழிக்கும் என்ற வாழ்வியல் கோட்பாடு, எவ்வளவு அருமையான கோட்பாடு.
இதயெல்லாம் சிந்திக்காமல் "கடவுள் மறுப்புக் கொள்கை" என்ற " தமிழ் மறுப்புக் கொள்கை" என்ற முட்டாள்தனமான கொள்கையை கடைபிடிப்பதுதான் பகுத்தறிவா?
தெலுங்கு நாயக்கரிசம் பாகம்--04 தொடரும்
No comments:
Post a Comment