சைவசமயத்தின் அடையாளக் கூறுகளுடன் தமிழ் மொழியும் கலந்ததே தமிழ்தேசியம் ஆகும். சிவன் அருளிய நந்திக் கொடியே தமிழ்தேசிய கொடியாகும்.
மெழுகுதிாியில் நெருப்பை மூட்டி குத்துவிளக்கு ஏற்றுவது கலாச்சார பண்பாட்டு சிதைப்பு ஆகும். மற்றும் தமிழ்தேசிய அழிப்பும் ஆகும்.
குத்துவிளக்கு ஏற்றும் பொழுது எண்ணெய் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கேற்றுவது தமிழர் மரபு ஆகும். அதுவே தமிழ்தேசியத்தின் பண்பாடு ஆகும்.
நிறைகுடம் வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்தல் என்பது தமிழர்களின் பாரம்பரியமாக இருக்கிறது. சைவத் தமிழ் மக்கள் தங்கள் கலை, கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், விசேஷ பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைத்து வரவேற்பதும், ஆராத்தி செய்வதும் ஆகம மரபு வழி வந்த வழக்கமாகும்.
தமிழரின் மங்கலப் பொருட்கள் அனைத்தும் தமிழ்தேசியத்தின் அடையாளம்.
தமிழ் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில் விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றுவதுதான் வழக்கமாக உள்ளது. தமிழர்களின் மரபு தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடாகும்.
No comments:
Post a Comment