பத்திாிகை செய்திகளை வெட்டி அனுப்பி வைத்த அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் என்றும் உண்டு.
‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.” (விடுதலை 30-05-1967),
‘‘பெளத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’ (விடுதலை 09-05-1953), ‘‘மற்றெல்லா மதங்களைவிட பெளத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.(குடியரசு 15-04-1928) , ‘‘மற்றெல்லா மதங்களைவிட பெளத்த மதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.(குடியரசு 15-04-1928) இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.(விடுதலை 03-02-1954). பெளத்தத்திற்கும் , அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.(விடுதலை 20-02-1955)
இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த தெழுங்கு நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.பெத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை .(குடியரசு 19-01-1936) பெத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.(குடியரசு 31-05-1936).
தெழுங்கு நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.(விடுதலை 06-01-1976).
புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய தெழுங்குஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?
‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’ (குடியரசு 16-11-1930) இப்படிச் சொன்ன நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’என்று தெளிவுபடக் கூறினாா்.
கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்ற கிறிஸ்தவ அறிஞர்களின் கூற்றை முதலில் ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக தெழுங்கு நாயக்கருக்கு மட்டும் மாறியது? இதன் சூத்திர தாாிகள் யாா்? நாயக்கருடைய முரண்பாடுகள்.
தெழுங்கு பெரியவர்பாகம்--14 இல் தொடரும்
No comments:
Post a Comment