பிரமாவுக்கும் திருமாளுக்கு சிவசோதியாக அருட்காட்சி கொடுத்த சிவன், கெளரி நோன்பு இருந்த அம்மனை தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டு தன் அடியாா்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளி அருளாசி வழங்கும் திருநாளே தீபாவளி திருநாள் ஆகும். இதுதான் தமிழரின் மறைக்கப்பட்ட பாரம்பரியம் ஆகும்.
தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசூரனுக்கு வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கித்துக்க நாளாகக் கொள்ளவேண்டும். (விடுதலை 17-10-1965) என்று தமிழர்களின் தீபாவளி திருநாளுக்கு பிழையான ஒரு விளக்கத்தை கொடுத்தாா் தமிழின அழிபப்பாளர் தெலுங்கன் அவர்கள்.
கண்ணன் கதை ஒரு கட்டுக்கதை, புராணங்கள் கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வந்தார். அவர் வாதப்படி கண்ணன் கதை கட்டுக்கதை என்றால் நரகாசூரனும் கட்டுக்கதைதான். நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும்பட்சத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் கட்டுக்கதையாகதான் இருக்கும்.
கண்ணன் கதைகள் , புராணங்கள் இவைககள் எல்லாம் கட்டுக்கதைகளாக இருக்கின்ற பொழுது, நரகாசூரன் கட்டுக்கதையாக இருக்கும் போது நரகாசூரன் கொலைக்காக துக்க நாளாகக் கொள்ளவேண்டுமாம், எதற்காக துக்கநாளாக கொள்ளவேண்டும்? நடக்காத சம்பவத்திற்கு துக்க நாளாக கொள்வதுதான் பகுத்தறிவா?
உண்மையிலேயே கண்ணனால் நரகாசூரன் கொல்லப்பட்டால் தானே துக்கநாளாக இவர்கள் சொல்லமுடியும்? துக்க நாளாக கொள்ளவேண்டும் என்று சொல்கிறார் என்றால் அந்த புராணக்கதை உண்மையிலேயே நடந்திருக்கிறது என்பதை நம்பிதானே இவர் இப்படி சொல்கிறார்?
ஒரு இடத்தில் புராணங்கள் உண்மையான வரலாறுகள் அல்ல என்கிறார். மற்றொரு இடத்தில் நடக்காத சம்பவத்திறாக துக்க நாளாக கடைபிடிக்க சொல்கிறார்.எதற்கா இந்த முரண்பாடு?
ஐந்திணைத் தமிழர் தெய்வங்கள்.
“மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
தமிழ் போற்றிய தமிழர்களின் ஐந்திணைத் தமிழர் தெய்வங்களை ஆரியர்களைத் தெய்வங்களாகவும் அதன் புராணா வரலாறுகளை கட்டுக்கதை என்றெல்லாம் பிதற்றிய தெலுங்கு பெரியவர் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று (விடுதலை 26-01-1943) கூறுகின்றார்.
இராமாயணம் – வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை ( வட இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூது வாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக்காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதை தொகுப்பாகும். (விடுதலை 17-10. 1954)
தெழுங்கு பெரியவர்பாகம்--15 இல் தொடரும்
No comments:
Post a Comment