திருவள்ளுவரின் திருக்குறள். மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், 55 புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்ட சைவத் திருவள்ளுவரின் சைவத் திருக்குறள்.
‘‘திருவள்ளுவர் திருக்குறளில் ஆரியக்கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் எழுதியிருக்கிறார். பகுத்தறிவை பற்றிக் கவலைப்படாமல் எழுதியிருக்கிறார். தனது மத உணர்ச்சியோடு எழுதியிருக்கிறார்’’ என்று விமர்சனம் செய்து தமிழின அழிப்பை செய்தவர்தான் இந்த தெலுங்கு பெரியவர்.
14.03.1948, மூன்றாவது திருவள்ளுவர் மாநாட்டில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் ‘‘(திருக்குறளில்) எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துக்களுக்கும் அதில் இடமில்லை’’ என்றும் ‘‘திருக்குறள் ஆரிய தர்மத்தை – மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்’’ என்றும் கூறுகிறார்.
23, 24-10-1948 அன்று ராமசாமி நாயக்கர்‘‘குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்’’ என்று கூறி சைவத் தமிழ் அடையாளத்தை அழிப்பு செய்கின்றாா்.
முதலில், திருக்குறள் தமிழ் இல்லை ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் நூல் என்று கூறிய ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் ஆரிய தர்மத்தை கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் என்று பல்டி அடித்தார்.
இரண்டாவது, திருக்குறள் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் எழுதப்பட்டது என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக திருக்குறளில் பகுத்தறிவுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அதில் இடமில்லை என்று கூறி பல்டி அடித்தார்.
மூன்றாவது, தனது மத உணர்ச்சியோடு எழுதினார் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாக குறள் இந்து மதக் கண்டன நூல் என்று கூறி பல்டி அடித்தார்.
20.01.1929 குடியரசு இதழில் ஈ. வே. ராமசாமி நாயக்கர், ‘‘அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும், மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பரக்கக் காணலாம்’’ என்று கூறுகிறார்.
இவ்வாறு கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர் தான் திருக்குறள் ஹிந்து மதக் கண்டன நூல் என்று முரண்படக் கூறுகிறார்.முரண்பாட்டின் மொத்த உருவம் நாயக்கர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---16 தொடரும்.
No comments:
Post a Comment