Monday, 19 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---12

 ‘‘சொல்லும் செயலும் முரன்பாடுகள்”.

‘‘தெலுங்கு பெரியாாின் மனைவி அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று தடுத்துவிட்டார். அம்மையார் இறந்த அன்று தெலுங்கு பெரியார் நடந்து கொண்டவிதம் பலருக்கு வியப்பைத் தந்தது. அவர் தமது கைத்தடியுடன் வாயிற்படியில் நின்று கொண்டார். துக்கத்திற்கு வரும் பெண்களிடம்  பிணத்தைப்பார்த்து அழுவது மூடநம்பிக்கையாகும். நாம் அழுவதால் இறந்தவர் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. அதனால்தான் தம் மனைவி இறந்த பின் யாரும் அழக்கூடாது என்றுஅழாமல் பிணத்தைப் பார்ப்பதாயிருந்தால் உள்ளே செல்லலாம், அழுவதாயிருந்தால் உள்ளே செல்லவேண்டாம். இப்படியே திரும்புங்கள்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். வந்த பெண்களும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியே நடந்து கொண்டார்கள். அதாவது பகுத்தறிவுப்படி பிணத்தைப் பார்த்து அழுவது மூடநம்பிக்கையின் செயலாகும் என்று கூறுகிறார். 

தெலுங்கு பெரியாாின் மனைவியின் பிணம் பெட்டியில் வைக்கப்பட்டது. வண்டியில் ஏற்றி மாடு கட்டி ஓட்டப்பட்டது. சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது.

 பெட்டியில் வைத்தல் முஸ்லிம் மத வழக்கம், வண்டியிற் கொண்டு-செல்லுதல் கிறிஸ்தவ மதத்திற்கு உடன்பாடு. சுடுவது இந்து மதக்கொள்கை. இம்மூன்றும் நாகம்மையார் இறந்த பின் பெரியாரால் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் நடைபெற்ற முரன்பாடுகளை நடத்திக்காட்டிய நன்முறையாகும்.”

சுடுகாட்டிற் கொளுத்தப்படுவது இந்து மூடநம்பிக்கை என்று மேடை மேடையாக பேசியவர் இறந்தவர் பிறந்த மேனியாக நிலத்தில் புதைக்கப்பட்டாள் பல உயிாினங்களுக்கு உணவாகும் இதுவே பகுத்தறிவு என்று எழுதியும் பேசியவர் தெலுங்கு பெரியார் இறந்தவர் பிறந்த மேனியாக நிலத்தில் புதைக்கப்பட்டாள் பல உயிாினங்களுக்கு உணவாகும் இதுவே பகுத்தறிவு என்று கூறிய தன் கொள்கையை புதைத்து  எது இந்து மூடநம்பிக்கை என்று சொன்னாரோ அதே மூடநம்பிக்கையை ஏற்றுக் கொண்டு  இந்து முறையில் சுடுகாட்டிற் கொளுத்தப்பட்டது அதாவது அக்கினிக்கு உணவாக்கப்பட்டது .இங்கே ‘சொல்லும் செயலும் முரன்பாடுகின்ன.”

தெலுங்கு பெரியாாின் மனைவி அம்மையார் (நாகம்மையார்) இறந்தவுடன் யாரையும் அழக்கூடாது என்று பிரகடணம் செய்தவர் மூதறிஞர் இராஜாஜியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும், அவருடைய உடல் சென்னை கிருட்டிணாம்பேட்டைச் சுடுகாட்டில் எரியூட்டப்பெற்ற போது சிதையருகே சக்கர நாற்காலியில் அமர்ந்து மறைந்த தம் நண்பருக்காகப் சிறுபிள்ளை மாதிரி குழுங்கி குழுங்கி அழுது  கண்ணீர் சிந்தினாா். தெழுங்கு நாயக்கரின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்ததில்லை என்பதை அறியவைக்கும் பதிவு.

தெழுங்கு பெரியவர்பாகம்--13  இல் தொடரும்

.

No comments:

Post a Comment