பெண்ணடிமையை அழிக்க வந்த வீரர்! பெண் விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்! பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தீரர்! என்றெல்லாம் நாயக்கரை பாராட்டினாா்கள்.போற்றி வழிபட்டாா்கள். நாயக்கர்தான் ஆணாக இருந்தபோதிலும் ஆணாதிக்கத்தை வெறுத்தவர் என்று அவரின் சீடர்கள் இன்றுவரை கூறுகின்றாா்கள்.உண்மையில் பார்க்கப்போனால் நாயக்கருக்கு ஆணாதிக்க மனப்பான்மை இருந்து இருக்கிறது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
”பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும், ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல” என்று நாயக்கர் கூறியது ஒருவேளை அவரை நினைத்து தான் சொல்லியிருப்பாரோ என்னவோ நமக்குத் தெரியது ஒருவேளை இது உண்மையாகக்கூட இருக்கலாம்.
அன்று முதல் இன்று வரை பெண் விடுதலைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் பலர் ‘பெண்கள் திருமணம் ஆனவுடன் தங்கள் பெயருடன் கணவனின் பெயரையும் சேர்த்து எழுதுகின்றனர். இது தனக்கு மனைவி அடிமையானவள் என்பதைக் காட்டுவதைத் தவிர வேறில்லை.
ஆனால் ஆண் தன் பெயருடன் தன் மனைவியின் பெயரை சேர்ப்பதில்லை. மனைவியின் பெயருடன் தன் பெயரையும் கணவன் போடச் சொல்வது ஆணாதிக்க மனப்பான்மையைத்தான் குறிக்கிறது என்று பெண்களுக்காக போராடும் போராளிகள் பலர் கூறுகின்றனர்.
நாயக்கருக்கு உண்மையிலேயே தனக்கு தன் மனைவி அடிமையல்ல என்று நினைத்திருந்தால் தன்னுடைய பெயரை சேர்க்கசொல்லியிருப்பாரா? தன்னுடைய பெயரை எதற்கு சேர்க்க சொல்லவேண்டும்? அப்படி என்ன அவசியம் வந்தது? மணியம்மையின் பெயருக்கு முன்னால் தம் பெயரை சேர்க்க வேண்டுகோள் விடுத்த நாயக்கர் தன் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ மணியம்மையின் பெயரைச் சேர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கலாமே அது தானே முற்போக்கு.
ஏன் அவ்வாறு செய்யவில்லை? தன் பெயருக்கு முன்னால் ஒரு பெண்ணினுடைய பெயரை சேர்ததால் அவமானம், அகெளரவம் என்றெல்லாம் நினைத்திருப்பாரோ என்னவோ யாருக்குத் தெரியும்? ஒரு வேளை இதுதான் ஆணாதிக்க மனோபாவமோ அவர்களுக்கே வெளிச்சம்.
நாயக்கர் எழுதிய ‘பெரியார் ஒரு வாழ்க்கை நெறி’ என்ற நூலிலே, ”ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும். ஜிப்பா போடவேண்டும். உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது. நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறுகிறார். (புத்தகம் தந்து உதவியவருக்கு நன்றி.)
மேலும் ‘குடியரசு’ இதழில் (16-11-30) கேள்வி பதில் வடிவில் இவ்வாறு எழுதுகிறார்:-பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும். பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்) இவ்வாறெல்லாம் பெண்களுக்கு நாயக்கர் அறிவுரைக் கூறுகிறார்.திராவிடக்கழகத்தினுடைய தோழிகளான தெருவோர விபச்சார கூத்தாடிகளுக்கும் சேர்த்துத்தான் சொல்லியிருந்தாா்.
நாயக்கர் பெண்ணடிமை நீங்கும் விதமாக கூறிய அறிவுரைகள், நாகம்மையாருக்கும், மணியம்மையாருக்கும் மற்றும் கழக தோழிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியானால் பெண்ணடிமை நீங்க ஆண்களைப் போலவே பெண்களும் வேஷ்டி, ஜிப்பா போடச் சொன்ன நாயக்கரின் கோரிக்கையை மணியம்மையும் கழக தோழிகளும் வேஷ்டி-ஜிப்பா அணியாமல் நிராகரித்தது ஏன்? புடவையே தேவை இல்லை என்று சொல்லிய காலத்தில் மணியம்மையும், கழக தோழிகளும் புடவையை உதறாமல் இருந்தது ஏன்? இன்றும் இருக்கிறார்களே ஏன்? நாயக்கர் கூந்தல் இருப்பது அநாகரீகம் என்று கூறிய பிற்பாடு மணியம்மையாரும், கழக தோழிகளும் கூந்தலை வைத்திருந்தனர் எதற்காக?
நாயக்கரின் கொள்கையை கடைபிடிக்கின்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற மணியம்மையும், கழக பெண்மணிகளும் நாயக்கரின் சொல்படி அவரின் கொள்கைப்படி நடந்து கொள்ளவில்லை.
நாயக்கரின் இறப்புக்குப்பின் மணியம்மை தலைமை ஏற்று நடத்தினாரே திராவிடர்கழகத்தை அப்போதாவது நாயக்கருடைய கொள்கையை கடைப்பிடிக்கவில்லை ஏன்?
தம்மை பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வு செயலுக்கு ஒரு முன்மாதிரியான தன்மையில் நடந்து காட்டுவது தானே ஒரு நல்ல தலைவரின் கடமை. நாயக்கர் சொன்னமாதிரி, பெண்ணடிமை விலக, மணியம்மையார் கூந்தலை அகற்றி, கிராப் வைத்துக்கொண்டு, புடவை கட்டாமல் ஜிப்பாவோ அல்லது சட்டையோ போட்டுக் கொண்டு, வேஷ்டிக்கட்டிக் கொண்டு முற்போக்காக ஒரு புரட்சி செய்ய மறுத்தது நாயக்கரின்படி செய்தால் தமிழ் பண்பாடு அழிந்துவிடும் என்ற என்ற காரணமா? நாயக்கரின் இந்த கருத்து ஏற்புடையது அல்ல என்ற காரணத்தால்தான் மணியம்மையும், கழக பெண்மணிகளும் கடைபிடிக்கவில்லை ஏன்பதே உண்மை.
ஆண்களும், பெண்களும் வித்தியாசம் தெரியாதபடி பழகவேண்டும், உடை உடுத்தவேண்டும் என்றெல்லாம் புரட்சியான செய்திகளை சொன்னா நாயக்கர் திராவிடர் கழகத்திலேயே பெண்களுக்கான தனி அணியை உருவாக்கினாரே ஏன்? திராவிடர் கழகத்திலே ஏன் மகளிரணி என்று வைத்தார்? நாயக்கரின் அகராதிப்படி, ஆண்களும், பெண்களும் வித்தியாசமில்லாதவர்களாக இருக்கவேண்டும். ஆனால் நாயக்கர் பெண்கள் அணி, ஆண்கள் அணி என்று பிரித்தது ஆண்கள் வேறு. பெண்கள் வேறு என்பதைக் சுட்டிக் காட்டினாா்.
தங்களுடைய கொள்கைக்கு மாறாக மகளிரணியை உருவாக்கினார்களே – அப்படி உருவாக்கும்போது யார் சட்டைப்போட்டுக்கொண்டு, தலைமுடிவெட்டி கிராப் வைத்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை மட்டும்தான் சேர்ப்போம் என்ற விதியை சேர்த்திருந்தால் இன்னும் புரட்சிகரமாக இருந்திருக்குமே – ஏன் அவ்வாறு செய்யவில்லை? திராவிடர் கழகத்தில் சேருபவர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய அல்லது தங்கள் அமைப்பினுடைய கொள்கைகளை ஏற்று செயல்படுவார்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கொள்கையை கடைபிடிக்கும் திராவிடர் கழகத்தினர் மகளிர் விஷயத்திலும் மேற்கண்ட விதிகளை சேர்த்திருக்கவில்லை.பெண்ணடிமை விலகவேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே இருந்திருந்தால் இவர்கள் இந்த விதிகளை சோ்த்திருப்பாா்கள்.இஸ்ஸாமிய பெண்கள் எவ்வளவு அடிமையாக கேவலமாக நடத்தப்படுகிறார்கள் இதைப்பற்றி நாயக்கர் பகுத்தறிவாளர் அல்லது அவரது திருட்டுக் கும்பல்கள் இதுவரை பேசியதுண்டா?
நாயக்கர் குடியரசு 17-11-1935 இல் கூறுகிறார்:-” ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதியிருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக்கொள்வோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகிறவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்ராயம்”
இஸ்ஸாமின் பெண்ணடிமையைப் பற்றிக் கேட்டால் பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்று சொன்னால் இந்து மதத்திலும் பெண்ணடிமை விலக பெண்ணுரிமை பேணுபவர்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்று நாயக்கர் ஏன் சொல்லவில்லை?
முஸ்லிம்களும் தமிழர்களே திராவிடர்களே என்று சொல்லும் ஈ.வே. நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா அல்லது இல்லையா?
கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமே ஆகும்.
திராவிடர் கழகத்தவர் உண்மையிலேயே பெண்ணடிமை விலக பாடுபடுவர்கள்தான் என்றால் எல்லா மத பெண்களுக்கும் சேர்த்து போராட வேண்டியதுதானே அது தானே சீர்த்திருத்தமாக இருக்கும்! இனிமேலாவது அவர்களுக்காக போராடுவார்களா?
நாயக்கர் பெண்ணடிமை விலக இன்னொரு வழியை கூறுகிறார். ”பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்”.(குடியரசு21-09-1946)
நாயக்கர் கூறிய இந்த அறிவுரையைகூட ஈ.வே. ரா. வே கடைபிடிக்கவில்லை. அதற்கு முரணாகத்தான் நடந்துகொண்டார். ஈ.வே. ரா. மணியம்மை என்று கூப்பிடுமாறு அறிவுறுத்தினாரே ஈ.வே. ராமசாமி நாயக்கர் – அந்தப் பெயரிலே இருக்கின்ற அம்மை என்பது பெண்பாலை குறிக்கின்றது. அதைத்தவிர்த்து வெறும் ஈ.வே. ரா. மணி என்று அழைக்கச் சொல்லியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?
ஆண்கள் பெயரையே பெண்களுக்கு இடவேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் – எத்தனை பெண்களுக்கு ஆண் பெயர் வைத்துள்ளார் என்பதை சொல்லமுடியுமா?
தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம் 19 இல் தொடரும்.
No comments:
Post a Comment