Saturday, 17 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு. பாகம்--- --02

 சிவன் அருளிய தெய்வத் தமிழ், தெய்வீகங்களையும், அறநெறிகளையும், ஆண்மாவை தெய்வீகமாக மாற்றுகின்ற சத்தியையும், தமிழ ன் என்று அடையாளப்படுத்துகின்ற தமிழ்தேசியத்தின் நாடி நரம்புகளான  தமிழை மறுத்துரைக்கின்றாா் ஈரோட்டில்  பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கர்.

தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் வேடர்கள், அவர்களின் கலாச்சார பண்பாடுகள் காட்டு மிராண்டித் தனமானது , இந்து வழிபாடு மூட நம்பிக்கை என்று தமிழர்களை இழிவுபடுத்தியவர் ஈரோட்டில்  பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கர்.

தெலுங்கர்கள் உருவ வழிபாடு செய்யவில்லையா?                                   சூரியனையும், பசுவையும், சிவனையும், பாம்பையும், இயற்கையையும் வணங்கியதாக தெலுங்கர் வரலாறு கூறுகிறதே.தெய்வீகங்களை போற்றியது தமிழ் என்ற காரணத்தை முன்வைத்து, பார்பனர்கள் கற்பித்த கடவுளை மறுக்கிறார் ஈரோட்டில்  பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கர்.

ஈரோட்டில்  பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கர் கடவுள் மறுப்புக் கொள்கையை மனைவி, உடன்பிறந்தோர், உற்றார், உறவினர்களிடம் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை அறிவுறுத்தினாரா? 

ஈரோட்டில்  பிறந்த வெங்கட்ட இராமசாமி நாயக்கர் என்ற தெலுங்கரின் தொண்டர்களாகிய இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் தங்கள் குடும்பத்தாரிடம் நாயக்கரின் கடவுள் மறுப்புக்கொள்கையை அறிவுறுத்தினர்களா?

இதற்கு பகுத்தறிவு ஜீவிகளின் பதில் என்ன, தெரியுமா? அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம், அதில் நாங்கள் தலையிடுவதில்லை, என்பார்கள்.

மக்கள் என்ன இளிச்சவாயர்களா?                                                                           மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? இவர்களுடைய பெண்டு பிள்ளைகள், குடும்பத்தார், உற்றார் உறவினர் இவர்களெல்லாம் சுதந்திரமாக கடவுளை ஏற்றுக் கொள்ளலாம். தங்களுடைய குடும்பத்தார் மட்டும் சுயமரியாதையுடன் இருக்கலாம். மற்றவர்கள் சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் தலையிடுவதற்கு இவர்கள் யார்?

கடவுளை நம்புகிறவன் முட்டாள், என்று எங்களையும், கடவுளை கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி என்று எங்கள் சான்றோர்களையும் சாடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

தெலுங்கு பெரியாாின் நாயக்கரிசம் பாகம்--03 மிகுதி தொடரும்



No comments:

Post a Comment