Saturday, 17 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு . பாகம்--- 04

 கடந்த பதிவுகளில் புராணங்களில் உள்ள வாழ்வியல் கோட்பாடுகளுக்கு சில உதாரணங்களை பார்த்தோம். இதிகாசங்களில் உள்ள இன்றைய அறிவியலுக்கு சமமான அல்லது மேம்பட்ட சில அறிவியல் உதாரணங்களை பார்ப்போம்.

மகாபாரதத்தில் பாண்டு மகாராஜாவின் மனைவிக்கு கர்ணன், தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று ஆறு மகன்கள். இவர்கள் ஆறுபேருக்கும் தந்தை பாண்டு மகாராஜா அல்ல.

கர்ணனுக்கு சூரியனும், தருமனுக்கு எமதர்மராஜனும், பீமனுக்கு வாயுபகவானும், அர்ஜுனனுக்கு இந்திரனும், நகுலன் மற்றும் சகாதேவனுக்கு அசுவனி தேவர்களும் தந்தை ஆவார்கள்.

எனவே குந்தி தேவி பத்தினி அல்ல, தன்கணவனை விடுத்து பிற ஆடவர்களோடு கூடி ஆறு மகன்களை பெற்ற குந்தி தேவியை எப்படி பத்தினி என்று ஏற்றுக்கொள்ள முடியும்? என்பது நம் பகுத்தறிவு ஜீவிகளின் ஆராய்ச்சிக் கேள்வி. இவர்களின் ஆராய்ச்சியும் கேள்வியும் இந்த அளவில்தான் இருக்கும் என்பது இலங்கை தமிழனுக்கு தெரிந்த விடையம்.

காரணம் இவர்கள் பகுத்தறிவு என்ற இரும்புத்திரைக்கு பின்னால் மறைந்து கொண்டு மறுபுறம் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பவர்கள். மறுபுறம் ஏதாவது இருக்கலாம் என்ற குறைந்தபட்ச சந்தேகம் அல்லது யூகம் கூட இல்லாதவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் வாரிசு இலாத தம்பதியினர் “டெஸ்ட் ட்யூப்” முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்களே, இந்த அடிப்படையில் அந்தப் பெண்ணை நெறிதவறியவள் என்று கூறிவிடமுடியுமா? கேட்டால் விஞ்ஞானம், அறிவியல் என்றெல்லாம் கூறுவார்கள்.

இதே விஞ்ஞானம் மகாபாரத காலத்திலேயே இருந்தது. என்பதை ஏன் இந்த பகுத்தறிவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர் ஒரு விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு தெலுங்கர் அல்லாத முனிவர் என்பதினால்தானே?

முனிவர்கள் எழுதிய ஒவ்வொரு விஷயமும் வாழ்வியல் கோட்பாடு, அல்லது விஞ்ஞான கோட்பாடு இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இங்கு சித்தர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் விஷயம் எங்கோ சென்றுவிடும்..
இப்படி அறிவியல் மற்றும் வாழ்வியல் சம்மந்தமான விஷயங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ளன, என்பதால் இவற்றை அழிய அனுமதிக்கக்கூடாது.
தெழுங்கு பெரியவர்பாகம்--05 தொடரும்

No comments:

Post a Comment