அட்டமி மற்றும் நவமி திதியில் சுப காரியங்கள் எதையுமே தமிழர்கள் ஆரம்பிக்கமாட்டார்கள் இதுதான் தமிழின் மரபு.
வித்தியாரம்பம் செய்வதற்கு (ஏடு தொடக்குதல்) ஒவ்வொரு வருடமும் நாவராத்தியின் இறுதியில் தசமி எப்பொழுது வருகின்றதோ அன்றுதான் வித்யாரம்பம் செய்யவேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் ஏடு தொடக்கல் வெற்றியைத்தரும். ஏடு தொடக்குதல் தமிழர்களின் மரபுவழி முறையாகும். தமிழ்தேசியத்தின் மரபுவழி கலாச்சார பண்பாட்டு அடையாளக் குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.
நவராத்திரி கொலுவை விஜய தசமியன்று நிறைவு செய்வது தமிழர்களின் மரபு ஆகும்.விஜயதசமி நாளன்று வித்யாரம்பம் செய்பவர்கள் நாள், நட்சத்திரம், தாராபலம், சந்திரபலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இதுதான் தமிழின் மரபு.
ஒவ்வொரு வருடமும் விஜய தசமியன்று நவராத்திரி கொலுவை நிறைவு செய்கின்றாா்கள் என்பதனை நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய உங்களின் கடமை ஆகும்.
No comments:
Post a Comment