Monday, 19 October 2020

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---16

 தமிழ் இலக்கியம், தமிழர்களுடைய வாழ்க்கையை மையமாகக் கொண்டது,  தமிழனின் சிந்தனைக்கும், உணர்வுக்கும், கற்பனைக்கும் விருந்தாக அமைவது;  தமிழனின் மொழியோடு தொடர்புடையது; சொற்கோலமாக விளங்குவது; குறிப்பிட்ட ஒரு வடிவினை, செய்யுளாலோ, உரைநடையாலோ உடையது; கற்பவருடைய எண்ணத்தில் எழுச்சியையும், இதயத்தில் மலர்ச்சியையும் உண்டாக்கும் ஆற்றல் வாய்ந்தது  தமிழனின் தமிழ் இலக்கியம் இன்புறுத்துவதோடு அறிவுறுத்தும் ஆற்றலை உடையது.சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளான,அறத்தை எடுத்துக் காட்டுவது, தமிழனின் தமிழ் இலக்கணம் என்பது தமிழின் செழிப்பை எடுத்துக் காட்டுவதாகும். 

‘‘நாம் பின்பற்றத் தகுந்த முறையில், நமக்கு பயன்படுகிற முறையில் எந்த இலக்கியம் இருக்கின்றது என்று காட்டுமிரான்டி தமிழர்களிடம் கேட்டாள்  தொல்காப்பியம் என்று சொல்லுவார்கள்.மொழிப்பற்று காரணமாக சொல்வார்கள்.உண்மையில் தமிழ் இலக்கியத்தில் கொலைக் காட்சிகளும், காதல் காட்சிகள் மட்டுமே உண்டு அதில் வேறு ஒன்றுமே இல்லை’’ என்று 1958 டிசம்பர் மாதம் வள்ளுவர் மன்றத்திலே கூறுகிறார். தமிழர்களின் தமிழ் மொழி செழிப்பை மறுத்துரைக்கின்றாா்.

உண்மையாகப் பார்ப்போமானால் தமிழர்களுக்கு இலக்கியமே இல்லை. இலக்கியங்கள் என்று பாராட்டத் தகுந்த இலக்கியங்கள் இல்லை.  திராவிட மக்கள் பின்பற்றத் தகுந்த முறையில் நமக்குப் பயன்படுகிற முறையில் எந்த இலக்கியமும் இல்லை.நாயக்கர் எழுதினாா் பேசினாா்.

தமிழரையும், தமிழையும், தமிழ் கலை கலாச்சார பண்பாடுகளையும் கேவலப்படுத்தி அழிப்பதுதான் நாயக்கரின் நோக்கமாக இருந்தது என்பது உண்மை.

தெலுங்கு பெரியாாின் தமிழின அழிப்பு பாகம்---17 இல் தொடரும்

No comments:

Post a Comment