இந்து மதத்தைவிட மகமதிய மதம் மேலானதே! ஏனென்றால் அதில் ஒற்றுமை, சமத்துவம், விக்கிர ஆராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன. (குடியரசு 03.11.1929)
* இஸ்லாம் மார்க்கத்தில் பார்ப்பார முஸ்லிம், பறை முஸ்லிம், நாயுடு முஸ்லிம், நாடார் முஸ்லிம் என இருக்கின்றதா என்று கேட்கின்றேன்.(குடியரசு 02.08.1931)
* மதங்கள் ஒழிந்த பிறகுதான், உலக சமாதானமும், ஒற்றுமையும் சாந்தியும் ஏற்பட முடியும் என்பத அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும் போது உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது. சாந்தி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.(குடியரசு 23.08.1931)
* தீண்டாமை மாத்திரம் ஓழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக மகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.(குடியரசு 17.11.1935)
* முஸ்லிம் சமூகத்தைப் பெருக்கி தீண்டாமையை ஒழிப்பதோடு, இந்தியாவை விடுதலையடையும்படிச் செய்யுங்கள்.(குடியரசு. 19.01.1936)
* அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகின்றேன்.(குடியரசு 31.05.1936)
* கிறிஸ்தவ மதமும், இஸ்லாமிய மதமும் ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு ஜாதிதான் உண்டு என்று சொல்கின்றேன். இங்கு இந்துமதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ, சூத்திரனாகவோ இருக்கிறவன், வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்கு போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன, கஷ்டமென்ன என்று கேட்கிறேன். (நூல்:- மதமாற்றமும், மதவெறியும்)
No comments:
Post a Comment