Friday, 12 March 2021
சுமத்திரனால் தொடரும் தமிழர்களுக்கு எதிரான துரோகம்.
குறுகிய காலத்தில் மிகவும் நூட்பகரமாக சுமந்திரனால் அடியோடு தமிழரசு கட்சி உருவாக்கிய தமிழ் தேசியம் முற்றும் முழுவதுமாக துடைத்து எறியப்பட்டது.கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைத்த தமிழ் மக்களுக்கு மாபெரும் துரோகத்தை சம்பந்தனும் சுமத்திரனும் கூட்டினைந்து நிறைவேற்றினாா்கள்.
மகாண சபை தேர்தலில் பதினொரு ஆசனங்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏழு ஆசனங்களை பெற்ற முஸ்ஸீம் காங்கரசுடன் கிழக்கு மாகாணத்தை ஆழுவதற்கு கொடுத்தாா்கள் இதனாலேயே கிழக்கு மாகாணம் துரித கதியில் இஸ்ஸாமிய தேசியமாக மாற்றப்பட்டது.
இதில் கவணிக்கப்பட வேண்டிய விடையம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மற்றைய கட்சியில் கேட்டு வென்ற தமிழர்கள் கிழக்கு மாகாணத்தை ஆழுவதற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி இருந்தாா்கள். இவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு இஸ்ஸாமியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் துரோக கூடரமாகும்.
ஹிஸ்புல்லாவின் கூற்றுப்படி சுமத்திரனால் திட்டமிட்டு வடக்கு கிழக்கு இனைந்த தேசம் என்ற ஒப்பந்தத்தை தகர்த்தெறிந்து தமிழர்களின் வடக்கு கிழக்கு இனைந்த தாயகத்தில் கிழக்கு மாகாணத்தை நீக்கி தமிழர்களின் தாயக பிரதேசத்தை இல்லாமல் செய்தாா்.
சுமந்திரனின் துனையுடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்ஸீம்களன் ஆட்சியை உருவாக்கியதன் மூலம் தமிழர்களின் நீண்ட கால தாயக கணவை உடைத்து எறிந்தாா்கள்.சுமத்திரனால் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட தோல்வியை முஸ்ஸீம் தலைமைகள் தமிழர்களை தந்திரமாக வீழ்த்தி
வெற்றிக் கொண்டுவிட்டதாக மாா்தட்டி திாிக்கின்றாா்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மிகவும் தந்திரமாக நுழைந்து கொண்ட சுமத்திரன் முதலில் தமிழரசு கட்சியை கைப்பற்றுவதே நோக்கமாக கொண்டது. இவர் தமிழரசு கட்சிக்குள் வந்த காலம் முதல் தமிழரசு கட்சியின் நீண்ட கால மூத்த உறுப்பினர்களையும்.அதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட மூத்த உறுப்பினர்களையும் குறுகிய காலத்தில் திட்டமிட்டவாறு வெளியேற்றினார்.
2020 யில் இடம் பெற்ற தமிழர்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் தோல்விக்கு சுமந்திரனே பிரதான காரணம் ஆகும்.அனைத்து கட்சியின் உள்வீட்டு கூட்டத்திலும் மாவை ஒரு விவேகமற்ற அரசியல் வாதியாக சுமத்திரனால் சித்தரிக்கப்பட்டு வந்தது. வெறும் ஐந்து வருட அரசியலில் அறிமுகமான சுமத்திரன் ஐம்பது வருடகாலமாக தமிழரசு கட்சிக்கு உழைத்தவரும் பல முறை சிறை சென்று பல துன்பங்களை அனுபவித்த மாவையின் பதவியை மிகவும் சூழ்சி கரமாக பறித்தெடுத்து வெற்றி கண்டாா் சுமத்திரன்.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான தமிழ் இன அழிப்பை மேற்கொண்டுவரும் சுமத்திரனை பாா்வையாளர்களான தமிழர்கள் மிகவும் தெட்டத்தெளிவாக இணம் கண்டு உள்ளாா்கள். அதேவேளை தமிழரசு கட்சிக்குள் இருந்து தமிழர்களின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்டு வருகின்ற நிதிகளை திருடி பதுக்கி உள்ள பெருச்சாளிகள் கண்டு கொள்ளாதது மிகவும் வேதனைக்குாிய விடையம்.இப்படியாக சுமந்திரனின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்புக்கு ஆதரவு கொடுத்து நிற்பாா்கள் ஆனால் அவர்களும் தமிழ் இன அழிப்பின் பங்காளிகள் ஆகும்.
இம்முறை தேர்தலில் சுமந்திரனுக்கு வாக்களித்தவர்கள் வழமையாக நாட்டு நடப்பு தெரியாது தமிழரசு கட்சியென்னும் பெயரை வைத்து வீட்டுக்கு வாக்களிக்கும் படிப்பறிவு அற்ற பாமர வயதானவர்களே வாக்களித்தனர்.
இதில் கவணிக்க தக்க சம்பமும் நடந்தேறி உள்ளது அதாவது கிறிஸ்தவ ஆலயங்களிலும் , கிறிஸ்தவ மத கூடங்களிலும் இரகசியமான முறையில் சுமத்திரனுக்கு வாக்களிக்கும் படி அழுத்தி கூறப்பட்டு இருந்தது. இவற்றை எல்லாம் பாா்க்கும் பொழுது ஏதோ ஒரு இடத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment