Thursday, 25 March 2021

ஜெனிவா தீர்மானத்தில் இலங்கையின் பிரதிநிதி சி.ஏ. சிந்திரப்பெருமா கூறுகையில்.

 ஜெனிவா தீர்மானம் தேவையற்றது, நியாயப்படுத்தப்படாதது மற்றும் ஐ.நா. சாசனத்தின் தொடர்புடைய சரத்துகளை குறிப்பாகமனிதஉரிமைகள் பேரவைக்குஅதிகாரத்தைவழங்கும் சரத்து 2 துணை பிரிவு 07 மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானங்கள் 60/251 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளை மீறுவதாகும் அத்துடன் ஐ.நா. பொதுச் சபையால் 60/251 தீர்மானத்திலோ அல்லது அடுத்தடுத்த தீர்மானங்களிலோ யு.என்.எச்.ஆர்.சி தனக்கு ஒதுக்கப்படாத பணிகளை ஏற்க முடியாது என்பதை சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.   

 அத்துடன் இந்த தீர்மானம் அனைத்து அரசுகளின் இறையாண்மை சமத்துவம் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை மீறியுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து அரசுகளின் இறையாண்மை சமத்துவம் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை மீறியுள்ளது

“சம்பந்தப்பட்ட நாட்டை விட எந்தவொரு நாடும் தனது மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லை, இந்த சபையின் நடவடிக்கைகளின் போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட ஒருவிடயம்  இது”. 

“தீர்மானத்தின் ஆதரவாளர்களிடம் கூறப்பட்ட குறிக்கோள்கள் இருந்தபோதிலும், இந்தத் தீர்மானம் இலங்கை சமுதாயத்தை துருவமய ப்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் என்று இலங்கையின் கருத்து உள்ளது.

இந்த தீர்மானம் இலங்கையின் ஒப்புதலின்றி சம்பந்தப்பட்ட நாடா முன்வைக்கப்பட்டது, எனவே அது பயனற்றது மற்றும் பிளவுபடுத்துகிறது. என்று இலங்கையின் பிரதிநிதி சி.ஏ. சிந்திரப்பெருமா கூறியுள்ளாா்.

1948 ம் ஆண்டில் இருந்து சிங்கள கிறிஸ்தவம் விதைத்த வினை இன்று அதன் வினை அறுபடையை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.


 





No comments:

Post a Comment