Saturday, 20 March 2021

திமுக கூட்டனிக்கும் மகிந்த ராஜபக்சாவுக்கும் இடையிலான உறவு.


 இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, அண்ணா நினைவிடத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என்று நடகமாடிய மு.கருணாநிதி.   அதிகாலையில் மூக்கு முட்ட தோசையும் இட்டலியும் சாப்பிட்டுவிட்டு தன் உண்ணாவிரதத்தை தொடங்கினாா்.

` தமிழக மக்கள் சார்பாக ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்று வரையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவித்த பிறகும், போரை நிறுத்த முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளதாக அறிந்தேன். ராஜபக்சே, உயிர்ப் பலி வாங்குவதில் என்னையும் பலியாக்கிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்காக என்னையே அர்ப்பணித்து உயிரைக் கொடுக்க முன்வந்துள்ளேன்' என உருக்கமாகப் பேசினார். அதேநேரம், `அமைச்சர்களோ தொண்டர்களோ என்னோடு சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டாம்' எனவும் வேண்டுகோள் விடுத்தார்.உண்ணாவிரதக் களத்தில் இருந்த கருணாநிதியைத் தொடர்பு கொண்டு சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் புலிகள் அழிக்கப்பட வேண்டயவர்கள் நீங்கள் வாழ வேணடியவர் என்று கூறி கருணாநிதியின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.








No comments:

Post a Comment