Friday, 12 March 2021

ஈழபோராட்ட அமைப்புகளும் தமிழகமும்.

 ரெலோ.                                                                                                                                      தந்தை செல்வாவின் மைந்தனான சந்திரகாசன் தான் அப் பொது ரெலோவின் ஆலோசகர் இருந்த காரணத்தால் சந்திரகாசன் மூலம் ரெலோவுடன் தனது உறவை இறுக்கிக் கொண்டார் கலைஞர் கருணாநிதி.

புலிகள்.                                                                                                                                     புலிகள் நெடுமாறனோடு நெருக்கமாக இருந்தார்கள். அவர் சொற்படியே நடந்தாா்கள்.பின்னாட்களில் MGR பணத்தை வீசி வாங்கிகொண்டாா்.

புளாட்                                                                                                                                            புளாட் அமைப்பை எஸ்.டி எஸ் சோமசுந்தரத்தின் மூலம் எம்.ஜி.ஆர் வளைத்துக் கொண்டவர் தமிழ்நாட்டில் சட்ட சபை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் புளெட் அமைப்பினர் தங்கியிருக்க வசதி செய்து கொடுத்தாா்.  எஸ்.டி.எஸ் சோமசுந்தரத்தின் அனுசரணையோடு பயிற்சி முகாம்கள் அமைப்பதற்கான இடங்களையும் " புளெட்" பெற்றுக் கொண்டது.

ஈ.பி.ஆர்.எல்.எப்                                                                                                      ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் க.பத்மநாபா "நக்சலைட்" என்றழைக்கப்படும் தீவிர கம்யூனிஸ்ட் அமைப்புகளோடு தொடர்புகள் வைத்திருந்தார்.

தலைமறைவாக இயங்கிவந்த  "நக்சலைட் "குழுக்கள் பல பிரிவுகளாக சிதைந்து கிடந்தன."மக்கள் யுத்தக் குழு" என்று அழைக்கப்படும் கோதண்டராமன் தலைமையிலான குழுவோடுதான் பத்மநாபா நெருக்கமாக இருந்தார்.

ஈரோஸ்                                                                                                                               ஈரோஸ்க்கு இருந்த பரிதாபநிலை என்னவென்றால் அதனை தமிழக சோசலிச வாதிகளும் நம்பவில்லை. மிதவாதிகளும் ஆதரிக்கவில்லை. தீவிரவாதிகளும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதன் காரணமாக சீனாவில் உளவு நிறுவனத்துடன் தன்னை இனைத்துக் கொண்டது.

No comments:

Post a Comment