Monday, 22 March 2021

மன்னாாில் தமிழ் மாணவ மாணவிகளுக்கு எதிரான கத்தோலிக்க அட்டூலியங்கள்.

 மன்னாாில் கிறிஸ்தவ பாடசாலைகளில்  தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயரை கொண்ட தமிழ் மாணவ மாணவிகள்   தமிழ் கலாச்சார பண்பாட்டின் மங்களகரம் நிறைந்த விபூதி அணிய கூடாது. சந்தனம் குங்குமம் போன்ற பொட்டுகளை வைக்கக் கூடாது. சைவசமயத்தின் அடிப்படையிலான கௌரி காப்பு வரலட்சுமி காப்பு இந்த நோன்பிருந்து கட்டுகின்ற இந்த காப்புகளை கையில் கட்டக்கூடாது.  தமிழ் மாணவிகள் தலையில் பூக்களோ அல்லது மாலைகளோ அணியக் கூடாது, இது போன்ற நிறைய கட்டுப்பாடுகள் சைவசமய   தமிழ் மாணவ மாணவிகளுக்கு விதிக்கப்படுகின்றது. தமிழின அழிப்பு செய்கின்ற சிங்கள அரசு செய்யாத தமிதேசியத்தின் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளை மன்னாாில் கிறிஸ்தவ பாடசாலைகள் செய்கின்றன.

அது மாத்திரமல்லாது வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு அருகில் இருக்கின்ற ஆலயங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பஞ்சபுராணம் ஓதுவித்து வந்த தமிழ் ஆசிரியர் கட்டாயத்தின் பெயரில் நிறுத்தப்பட்டாா்.

 கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்கின்ற  தமிழ் மாணவ மாணவிகள் கிறிஸ்தவ மதத்தினுடைய வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும் இது கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைப்பற்றி யாரும் அதிபரிடமோ அல்லது ஆசிரிடமோ கேட்கும் பொழுது அது எமது பாடசாலையின் விதிமுறை என்று கூறுகிறார்கள்.

வன்னி மாவட்ட ( மன்னாா் தொகுதி ) பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதன் ஒரு சில பெற்றோா்கள் முறையிட்ட பொழுது மன்னாாின் கலாச்சாரம் கத்தோலிக்க மதம் சாா்ந்தது என்று கூறி வழிஅனுப்பிவைத்துள்ளாா்.

பாடசாலையின் பெயர் போன்ற விபரங்களை வெளியிட்டால் தமக்கு ஆபத்து என்று கூறிய காரணத்தால் இங்கு எநதவொரு நபரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் இயங்குகின்ற எந்தவொரு இந்துக்கல்லூரியிலும் ஏனைய தமிழ் பாடசாலையிலும் கிறிஸ்தவ மத  மாணவ மாணவிகளுக்கு எதிரான அவமரியாதை நிகழவில்லை .ஆனால் மன்னாாில் தமிழ் மாணவ மாணவிகளுக்கு எதிரான கத்தோலிக்க அட்டூலியங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

No comments:

Post a Comment