Friday, 12 March 2021

தமிழன்.

தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது.  பிறப்பதால் தமிழர் நாட்டில் மட்டும் தமிழனாகிவிடமுடியாது. தமிழ் வாழையடிவாழையாக  வருவதனால் மட்டும் தமிழனாகிவிட முடியாது.  தமிழ்தேசியத்தின் அடையாளமாக  இருப்பவனே தமிழன்.
தமிழரென்ற தமிழ்தேசிய அடையாளம் தொலைத்து தமிழ் மட்டும் பேசினால் தமிழன் ஆகிவிட முடியாது.

 நல்ல தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் அவனொரு  தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்.  தமிழ்தேசியத்தின்  தமிழ் பெயரே தமிழன் என்றே அடையாளம்  அடையாளப்படுத்தும்.

சிவகுமாரன்  என்று இருக்கும் பெயரை அன்ரன் என்று மாற்றும் போது தமிழ் இன அடையாளத்தை அழித்து கிறிஸ்தவ தேசியமாக மாறுகின்றான்.இந்த மாற்றமானது தமிழின அழிப்பு ஆகும். 

அன்பரசன் என்ற பெயரை அப்துல்லா என்று மாற்றும் போது  தமிழ் இன அடையாளத்தை  அழித்து இஸ்ஸாமிய தேசியமாக மாறுகின்றான்.  இந்த மாற்றமானது தமிழின அழிப்பு ஆகும். 


தமிழ்தேசியத்தில் இருந்து கிறிஸ்தவதேசியத்திற்கு அல்லது இஸ்ஸாமிய தேசியத்திற்கு நீ மாற்றம் செய்யப்படும் பொழுது உன்னுடைய பெயர் எதற்காக மாற்றப்படுகின்றது எப்போதாவது நீ அதை சிந்தித்திருந்தால் நீ உன் அடையாளம் அழிக்கப்படுகிற தென்பதை உணர்ந்து கொண்டிருப்பாய் ஒரு போதும் உன் பெயரை மாற்றிக்கொண்டிருக்க மாட்டாய்.

 தமிழா சிந்தி தமிழ்தேசியத்தின் வரலாற்றை தொலைத்த தமிழ் இனம் செத்த பினத்திற்கு சமம்.தமிழ்தேசியம்  அவமானம் அல்ல உன் அடையாளம்.உன் மண்ணுக்குறிய உன் இனத்துக்குறிய அடையாளங்களை கொண்டது  தமிழ்தேசியம்.

No comments:

Post a Comment