Saturday, 13 March 2021

மூங்கிலாறு கிராமத்தில் கிறிஸ்தவ அட்டூளியம்.

 முல்லைத்தீவில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் உடையார்கட்டு கிராமத்தை அடுத்து அழகிய வயல்வெளிகள் தோட்டங்கள் என்று அழகாக காட்சியளிக்கும் பாரம்பரிய சைவ கிராமம்தான் மூங்கிலாறு கிராமம். ஆனால் இன்று அது தன் அழகை இழக்காது விட்டாலும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்களை  இழந்து நிற்கிறது. 

யுத்தத்தின் பின்னரான மக்களின் மனப்பிறழ்வு மற்றும் வறுமை என்பவற்றை பயன்படுத்தி அரைவாசி வரையான மக்கள் மதம்மாற்றப் பட்டுள்ளார். தொடர்ந்தும் மதமாற்றம் நடந்து வருகிறது. 50 மீட்டர் 100மீட்டர் இடைவெளிகளில் பிரதான வீதியில் மட்டும் 4 கிறிஸ்தவ மதமாற்ற கூடங்கள். அவ்வாறு கிராமத்தில் உட்பகுதிகளிலும் பல மதமாற்ற சபைக் கூடங்கள். அந்த கிராமத்தை முழுவதும் கிறிஸ்தவ மயமாக்கி அரேபிய ஏபிரகாமிய தேசியமாக.மாற்றும் நோக்குடன் தமிழின அழிப்புகளை செய்துகொண்டு இருக்கின்றாா்கள்.

அந்த பிரதான வீதியில் அமைந்துள்ள நான்கு சபைக்கூடங்களின் நடுவில் அமைந்துள்ளது அண்மையில் உருத்திர சேனையினால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட சிவாலயம்.மீளுருவாக்கம் செய்யப்பட்ட அன்றே உடைத்தெறியும் வெறியுடன் மதமாற்ற முகவர்களாக அரசியல் செய்யும் பிரதேச அரசியல் வியாபாரிகள் செய்த அட்டூழியங்களை பலர் முகநூலில், செய்தித்தளங்களில் பார்த்திருப்பீர்கள். அங்கே கூடிய சைவ மக்களின் எழுச்சியால் மதமாற்ற கூட்டத்தின் முயற்சி தோற்றது. மதமாற்ற கூட்டத்தின் பணத்தில் அரசியல் செய்யும் அல்ப்பத்தனமான பிறவிகளின் முயற்சி தோற்றது.

கிராம மக்கள் மகிழ்ச்சியுடனும், சைவ எழுச்சி உடனும் சிவராத்திரிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் அதனைக் குழப்புவதற்காக முன்னால் உள்ள மதமாற்ற சபைக்கூடம் ஒன்று தனது சபைக்கூடத்தை சேர்ந்தவர்களை அழைத்து விடிய விடிய பெரும் சத்தத்துடன் அவர்களின் அவல ஓசையை எழுப்பிய வண்ணம் இருந்தனர். ஒவ்வொரு சாம பூசையின் போதும் அவர்களின் உளறல் சத்தம் அதிகமாகவே ஒலித்தது.

ஆனால் சைவ மக்கள் மிக பொறுமையாகவும் நாகரிகமாகவும் நடந்து கொண்டார்கள். தமது ஆலயத்தை சிறப்புற மீளமைத்தல், நித்திய பூசைகள் செய்வித்தல் என்பதில் மட்டும் அவர்கள் உறுதியான கவனத்தை செலுத்துகிறார்கள். தினமும் ஒருவேளை பூசை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் இரண்டு வேளை பூசை நடைபெறுகிறது.

புலம்பெயர்தேசத்தில் வாழுகின்ற சைவக்குடிகளே உங்கள் திருப்பணியை செய்து கொடுங்கள். அவர்களின் தற்போதைய ஒரே எதிர்பார்ப்பு பூசை தொடங்குவதை ஊர் முழுவதும்  அறிவிக்கும் ஒரு மணி ஓசை மட்டுமே. சிவப்பணிக்கு விபரங்கள் தேவை என்றால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment