பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) தீர்மானத்தில் வாக்களிப்பதிலி ருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை தவிர்த்துக்கொண்டது.
மேற்குகுலகு தலைமையிலான முக்கியகுழு முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தால், பாஜகவும் அதன் நட்பு கட்சியான ன அதிமுகவும் தேர்தலில் விலையை செலுத்த வேண்டியிருந்திருக்கும். இருப்பினும், புது டி ல்லி தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பதை விட நடுநிலை வகிப்பதைத் தேர்ந்தெடுத்தது.
இலங்கையில் மனித உரிமைகள் குறித்தபிரச்சினைக்கு இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படை விடயங்களினால் வழிநடத்தப்படுகிறது.இலங்கைத் தமிழர்களுக்குசமத்துவம், நீதி கெரவம் மற்றும் சமாதானம் தொடர்பாக இந்தியா அளிக்கும் ஆதரவு ஒன்றாகும்.
மற்றொன்று இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் இந்தியா அக்கறையாக உள்ளது. இந்த இரண்டு குறிக்கோள்களும் பரஸ்பரம் ஆதரவளிப்பதாக இந்தியா எப்போதும் கூறிவந்திருக்கின்றது.
இரு நோக்கங்களையும் ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் முன்னேற்றம் சிறந்ததாக இருக்கும் என்பதுதான் இந்தியாவின் கருத்து. இந்தக் கருத்தைததான் இந்திராகாந்தி அம்மையாா் காலம் தொடக்கம் இந்தியா கூறிவருகின்றது.
“இலங்கை யின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படிமாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும், அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உட்பட, அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது”.
“அதே நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையுடன் தொடர்புடைய தீர்மானங்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு இணங்க உயரிஸ்தானிகராலயத்தின் பணி இருக்க வேண்டும் என்று இந்தியா கூறுகின்றது”.
“இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை தீர் த்துவைக்கவும் , அதன் அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்துகின்றது”.
“இந்திய அரசாங்கம் குறித்த தீர்மானத்தை ஆதரிக்காதது ஒரு இராஜதந்திர நகர்வு என ஒரு சிலர் கூறியதுடன் இலங்கை அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என இந்தியா தொடர்ந்தும் நம்புகின்றது எனவும் தொிவித்தனர்”.
“வேறு சிலர் உலக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்தியா செயற்பட்டுள்ளது எனவும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பெரும் பங்களிப்பை வழங்கிய நாடு இந்தியா எனவும் அவ்வாறான சூழ்நிலையில் எப்படி இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்”.
“ உண்மையில் ஐ.நா தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்காமல் நடுநிலை எனும் பெயரில் நழுவியமை என்பது பல தரப்பட்ட கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது. அரசியல் விமர்சகர்கள் இந்திய அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பங்களிப்பு செய்திருந்ததா என்ற கேள்விக்கு ஓம் என்ற பதிலையே அளிக்கின்றனர்”.
“அரசியல் விமர்சகர்கள் இந்தியா இலங்கைக்கு எவ்வகையில் உள்நாட்டு யுத்த காலத்தில் உதவிகளை வழங்கியிருந்தது என குறிப்பிட்டுள்ளமையை சுட்டிக்காட்டி, யுத்த குற்றத்திற்கு இலங்கையுடன் இணைந்து செயற்பட்ட இந்தியா, எப்படி இலங்கை அரசை மட்டும் குற்றவாளி எனக் கை காட்டும் என்று வினாவையும் எழுப்புகின்றனர்”.
“மேலும் கருத்துக்களை வெளியிட்ட அரசியல் விமர்சகர்கள் இந்தியா ஐ.நா தீர்மானத்தில் நடுநிலை வகித்தமைக்கு பின்னணியில் இலங்கையை போர் குற்றவாளி எனக் கூறுவது தன்னை தானே காட்டிக் கொடுப்பதற்கு சந்தர்ப்பமாக அமையும் என கருதியிருக்கலாம் என்று தெரிவித்தனர்”.
“இந்திய இலங்கை உறவு என்பது ஆரம்ப காலம் தொட்டே சிக்கல்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இதனை கடந்த கால வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக 1971ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் இந்தியா இடையில் பெரும் மோதல் ஏற்பட்ட வேளை பாகிஸ்தான் விமானங்கள் இலங்கை விமான நிலையங்களில் இறங்குவதற்கும் எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் அப்போதைய இலங்கை அரசாங்கம் அனுமதியளித்திருந்தது ”.
“இந்தியா இலங்கையின் இறமையை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தது. குறிப்பாக இலங்கையில் தமிழ் ஆயுத குழுக்கள் உருவாகுவதற்கு இந்தியா பின்புலமாக செயற்பட்டமை, ராஜீவ் அரசாங்கத்தால் 1987 ஆம் ஆண்டு ஒப்ரேசன் பூமாலை எனும் பெயரில் இந்திய விமானப்படை இலங்கையின் அனுமதியின்றி இலங்கை வான் பரப்பில் பறந்து இலங்கை தமிழ் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியமை மேலும் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பவற்றை குறிப்பிட முடியும்”.
“ இங்கு இலங்கை தமிழர் பிரச்சனை என்பது இலங்கையை கட்டுப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவின் இன்றைய அவமாணத்திற்கும் தலைக்குணிவிக்கும் காரணம் சோணியா காந்தியின் தலைமையில் இருந்த காங்கரஸ் கட்சியும் திமுக வும்தான் காரணம் ”.
ஆக்கம் அருளகம்.
No comments:
Post a Comment