Tuesday, 16 March 2021

தோரணங்கள்.

 நமது கலாசாரத்தில் பல பழக்க வழக்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை, பெரும்பாலும் உடல்நலத்தையும் மனநலத்தையும் மேம்படுத்துவதற்காகவே தொடங்கப்பட்டிருக்கும். காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் சில பழக்கங்களுக்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கும். 

மங்கல, அமங்கல நிகழ்வுகள் நடப்பதைக் குறிக்க வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டப்பட்டன. அவை கட்டப்பட்டிருக்கும் முறையை வைத்தே அந்த வீட்டில் என்ன நடக்கிறது எனக் கூறிவிடலாம்.

மங்கல தோரணம்.                                                                                               சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும். இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.


அமங்களத் தோரணம்.                                                                                 
மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்களத் தோரணம் எனப்படும். இது மூன்று குருவிகள் இறக்கை மேல்நோக்கி கொண்டிருக்கும். அறம், பொருள், இன்பம் அனுபவித்த ஆன்மா பூவுலகை விட்டு மேலுலக வாழ்வில் வீடுபேற்றை நோக்கி இருவினைகளுடன் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது என்னும் தத்துவ விளக்கத்தைத் தருகிறார்கள்.

நம் தென்னாட்டிலும் இலங்கையிலும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. நமது நாட்டில் நான்கு அல்லது ஐந்து குருவிகள் கொண்டு விளங்கும் ;இலங்கையில் ஐந்து குருவிகளைக் கொண்டு விளங்கும்.அதற்குக் காரணமும் சொல்கிறார்கள். மங்கலத் தோரணமாவது தென்னைமரத்தின் மஞ்சள் குருத்தோலைகளில் ஐந்து தளங்களுடன் இரு முனைகளும் நிலத்தைப் பார்க்குமாறு கட்டப்படவேண்டும்.



No comments:

Post a Comment