மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியமை ஜெனிவாவில் தோல்விக்கு காரணமாகும். 2009ம் ஆண்டு காலத்தில் இந்தியா (இந்திரா காங்கரஸ் கட்சி) இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கியதால் அந்த வெற்றியை .இலங்கை அடைய முடிந்து.
இந்தியாவிற்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிகளான வழங்கிய 13வது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தி பொலிஸ், காணி அதிகாரங்களுடன் 13+ தருவதாக கூறிய உறுதியையும் நிறைவேற்றத் தவறியதால் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு இந்தியா இம்முறை ஜெனிவாவில் ஆதரவுஅளிக்கவில்லை அத்துடன் இந்தியா இரகசியமான முறையில் இலங்கையை கட்டிபோட்டு இருக்கின்றது. இந்தியா இலங்கைக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட வேண்டும் என்றால் தனது இராணுவத்தை நேரடியாகவேே அனுப்பி இருக்கும்.
87-89 வன்முறை காலத்தில் பயங்கரவாத குழுவொன்றை வழிநடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நபரை ஜெனீவாவிற்கான நிரந்தர பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் அவருக்கு ஆதரவு வழங்க எந்தவொரு நாடும் முன்வராதும் ஜெனிவாவில் இலங்கைக்கு கிடைத்த தோல்விக்கு காரணமாகும்.
இலங்க அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே ஜெனிவாவில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டது.
No comments:
Post a Comment