இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு தமிழ்க் கிழவி தாய் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தா. கொன்றை வேந்தன்’ என்ற நீதி நூலில் ஒளவைப் பாட்டி முதலில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறாள். இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள். ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.அநுபவ ரீதியாக ஔவையாரால் கூறிவைக்கப்பட்ட ஓர் அருமையான முதுமொழியாகும். ஆழ்ந்த கருத்தினைக் கொண்டுள்ள இச் சொற்றொடர் அள்ள அள்ளக் குறையாத ஆழ்கடலை ஒத்ததாகும்.
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தன்னலமற்றது தாயின் நெஞ்சம் ,.கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று கருணையும் தாயும் கடவுளும் ஒன்று , பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு" மிகவும் அழகாக தாயை சிவஞான அறிவு கொண்ட தமிழர்கள் போற்றியுள்ளாா்கள்.
தாயும் தந்தையும் நம் இரு கண்கள் போன்றவர்கள். கண்கள் இல்லாவிட்டால் ஒருவனது வாழ்வில் எத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் தாய் இல்லாமல் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. தாயே எமக்கு மூலாதாரம். தந்தையே ஜீவாதாரம். அப்படிப்பட்ட இந்தத் தாயின் அன்பு, உலகின் எந்த அன்புக்கும் ஈடாகாது. அதனால் தான் தாயை முன்னுக்கு வைத்து மாதா,பிதா, குரு,தெய்வம் என்று போற்றுகின்றார்கள்.
பிள்ளைகளுக்கு பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள். உண்ணும் முறை, உடுத்தும் முறை, பேசும் முறை, பழகும் முறை, நடந்து கொள்ளும் முறைபோன்றஅடிப்படையான செயல்களுக்கு பெற்றோர்களே ஆசிரியர்கள். மேலும் பண்புகள், பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள், நல்லொழுக்கம், அறநெறி, இறைஉணர்வு போன்றவற்றையும் முதன் முதலாக பிள்ளைகளுக்கு ஊட்டுவதும் பெற்றோர்களே.
குழந்தைகள் நன்கு படிப்பதற்கும், நல்ல பண்புகளுடன் விளங்குவதற்கும் தாயே முக்கிய காரணம். அவளின் அதி கவனமும், கவனிப்பும் இல்லையேல் குழந்தைகள் சிறப்புறவளர மாட்டார்கள். “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’.என்று பாடியும் உள்ளனர்.
அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளை பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் வளர்ப்பது தாய் தந்தையரின் கடமையாகும்.
சைவத்திருவள்ளுவர் தனது குறளில் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் கூறியுள்ளாா்.
மகன் தாய்குச் செய்யும் உபகாரம்--- தன் மகனை கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் ,நற்பண்பு நிறைந்தவன் என சிவஞான அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய் தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் ----- தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும் என்று குறிப்பிடுகின்றாா்.
மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம்- நற்பண்புகளை வாழ்வில் உடைமையாகக் கொண்டு நல்லியல்புடையவராய், அறநெறி பிறளாது , வாழ்தல் வேண்டும் இது வான்புகழ் வள்ளுவனின் சைவ வாழ்வியல் நெறி இட்ட கட்டளை.
தாய் தந்தையர்களை தெய்வமாக போறறி பிள்ளைகள் செய்யும் அந்திம நேரக்கடமை.
தமிழர்களினால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்களாகப் போற்றப்பட்டவர்களின் அந்திம நேரக்கடமைக்காக எங்கிருந்தாலும் வந்து சேரவேண்டியது அவர்களின் கடமையாகதான் போற்றி வாழ்ந்தவர்கள்.
ஆதிசங்கரர் அவர் தன் தாயிடம்"அம்மா உன் அந்திம நேரத்தில் எங்கிருந்தாலும் நான் உன்னிடம் வந்துவிடுவேன்,நீ கவலைப்படாதே" என்று வாக்கு தந்துவிட்டுத்தான் சன்னியாசம் செல்கிறார்.
பட்டினத்தார் தாயின் மெல்லுடலை கட்டைகளும், சுள்ளிகளும் குத்திக் கொடுமைப் படுத்தும் என்று வாழை மட்டைகளால் சிதையமைத்து தாயின் பெருமைகளை நினைத்துப் பாடல்களைப் பாடுகிறார்.முன்னை யிட்டதீ முப்புரத்திலே பின்னை யிட்டதீ தென்னிலங்கையில் அன்னை யிட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்கமூள்கவே என்று பாட சிதை தானாகவே பற்றி யெரிகின்றது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக வழிபட்ட தமிழர்கள் அவர்கள் இறந்தால் பின்பு கூட தெய்வங்களாக வணங்குவதற்காக பல சிறப்பான நாட்களை சிவஞான அறிவு கொண்டு திவசம் (திதி) என்று தெரிவு செய்து வழிபட்டாா்கள்.
தை அமாவாசை. நமது பித்துருக்கள் என்று அழைக்கப்படும் மூதாதையர்களுக்கு நாம் செய்கின்ற கடமை விரதமிருந்து ,அவர்களை நினைவு கூறுவது தமிழர்களின் மரபு.
சித்திரா பெளர்ணமி. தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது தமிழ் சமூகத்தின் தாய் வழிபாட்டுப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வாகவும் சித்திரா பூரணை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆடி அமாவாசை. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது நினைவு கூறுவது நாம் செய்கின்ற கடமை தமிழர்களின் மரபு.
https://www.youtube.com/watch?v=CaieWhEJqMs&ab_channel=RajaJeanPierre
https://www.youtube.com/watch?v=o70woaLjJLo&ab_channel=TamilaruviManian%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.
No comments:
Post a Comment