சைவம் தமிழ்ச்சொல்லே அல்ல என விவாதிக்கும் திராவிடம் கம்யூனிச சோசலீச ,லெனினிய ,மாவோயிச வாதிகளுக்கான விளக்கம்.
சைவம் எனப்படுவது யாதெனில் சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்பார் திருமூலர். சிவ வழிபாடு என்பது சைவநெறி ஆகும். சிவநெறி என்பது சைவநெறியாக மருவிற்று.சிவனை ஸிவனென்று வடமொழிவிசுவாசத்தை திணிக்கும் இந்துக்களே நீங்கள் தமிழர் எனச்சொல்ல வெட்கப்படவேண்டும். சிவன் என்ற சொல்லே பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழர்கள் பயன்படுத்தவில்லை. மாறாக இறைவனை குறிப்பிட
"செஞ்சடை வானவன்" "நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி" உலகுபொதி யுருவத் துயர்ந்தோன்" (சிலப்பதிகாரம்)
"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல "(கலித்தொகை, 38)
"தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு #முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்" (கலித்தொகை, 2)
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி நீலமணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே. (புறநானூறு :91)
நன்றாய்ந்த நீணிமிர்சடை முது முதல்வன் (புறநானூறு :166)
"ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்" (புறநானூறு)
நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ஆய் (சிறுபாணாற்றுப்படை, 96-97)
நீரு நிலனுந் தீயும் வளியு மாக விசும்போ டைந்துடனியற்றிய. மழுவாள் நெடியோன் தலைவனாக (மதுரைக்காஞ்சி)
இவ்வாறு சிவனென குறிப்பிடாத சிவனைக்குறிக்கும் பெயர்கள் தமிழில் உண்டு என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். தமிழில் சைவம் என்று பயன்படுத்தப்பட்ட இடத்தையும் சிவனை ஈசன் என குறிப்பிடப்பட்ட இடத்தையும் மணிமேகலையில் காணலாம்.
"இறைவன் ஈச னென நின்ற சைவ வாதிநேர்படுதலும் பரசுநின் தெய்வ மெப்படித் தென்ன இருசுட ரோடுஇய மானன்ஐம் பூதமென்று எட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனும் கலையுருவி னோனும் படைத்துவிளை யாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோன் இறைவன் ஆகுமென்று உரைத்தனன்"
எனவே தமிழர்களாக இருந்து பிறமொழி விசுவாசம் காட்டுவது நகைப்புக்குரியது.எமது சமய நிலையை கருத்தில் கொண்டு சைவர்களும் இந்துக்களோடு கரங்கோர்த்திருக்கிறோம். உங்களுடைய சிந்தனை தமிழை அல்லது சைவர்களை(சிவநெறியர்களை) ஓரங்கட்டுவதாக இருப்பின் அரசியல் போல கூட்டணியில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
நமசிவாய
No comments:
Post a Comment