விசுவமடு தொட்டியடி இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமம். யுத்தத்தினால் உடல் முழுவதும் காயப்பட்டு, பாதி அங்கங்கள் செயலாற்ற முடியாத, கணவனை இழந்த அபலைப் பெண் ஜெயவாணியுத்தம் தந்த இழப்பு, அதனால் ஏற்பட்ட மன வெறுப்பு என பாதிக்கப்பட்ட அந்த பெண் சிவில் திணைக்க அரசு பணியாளர்.
கத்தோலிக்க கும்பல் அந்தப் பெண்ணின் ஏமாளித் தனத்தை பயன்படுத்தி பேராசைகளைக் காட்டி வங்கிக் கடன், லீசிங் என அவர் பெயரில் பெற்று ஏமாற்றி, கடன் சுமையில் சிக்க வைத்துள்ளது.
கடன் சுமையில் சிக்கிய அந்தப் பெண்ணின் பிள்ளைகளும் நோய்வாய்ப்பட்ட நிலையில், பெற்ற கடன்களால் சம்பளமும் கையில் கிடைக்காது செல்ல அந்தப் பெண் செய்வதறியாது மேலும் மனநலம் பாதிக்கப்பட்டார்.
வேலையை விட்டு, ஊரை விட்டு கால்போன போக்கில் எங்கெங்கோ அலைந்தாள் அந்த அபலை, பின்தொடர்ந்த சதிகார கிறிஸ்தவ கூட்டம் மீண்டும் ஒரு வலையை விரிந்தது. உணவு தருகின்றோம், பிள்ளைக்கு நோயை குணப்படுத்தி தருகின்றோம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். பதிலுக்கு மதம்மாற நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.
உடல் இயலாமை, பிள்ளைகளின் நோய், உண்ண உணவற்ற வக்கற்ற நிலை இவை எல்லாம் சேர்ந்து மறுக்க முடியாத நிலைமை. தன் இந்த நிலைக்கு காரணம் இவர்கள் தான் என்று உணரமுடியாத நிலைமை.
யார் யாரோ வீடுகளில் தங்க விடப்பட்டாள், ஒரிரு மாதம் உணவிற்கு என்று அரிசி மாவு கொடுத்தார்கள். அவர் மதம் மாறிவிட்டார், குடும்பத்துடன் முட்டி போட்டு மூழ்கிவிட்டார் என்று உறுதியானதும் கைவிட்டு விட்டார்கள்.
மீண்டும் அந்த பெண் நிலை பரிதாபம். அவளும் பிள்ளைகளும் மீண்டும் உணவுக்கு கையேந்தும் நிலைமை. மீண்டும் தன் சொந்த ஊர் விசுவமடுவிற்கு திரும்புகிறாள். கிராம அலுவலரிடம் தன் நிலையை சொல்லி புலம்புகிறாள். சைவத் தமிழ் உணர்வாளரான அந்த கிராம அலுவலர் சக சைவத் தமிழ் உணர்வாளரான உணர்வாளரான மற்றைய கிராம அலுவலர் ஒருவருடன் தகவலைப் பகிர்ந்து கொள்கின்றார்.
உடன் செயலில் இறங்கிய இருவரும் அந்த குடும்பத்திற்கு மாதாமாதம் செலவுக்கான பணத்தை வழங்க ஒழுங்கு செய்கிறார்கள். பிள்ளைகளை மீண்டும் பாடசாலையில் சேர்க்கிறார்கள். அந்த பெண் இழந்த வேலையை மீண்டும் பெற உதவுகிறார்கள்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மோசடி கும்பல் கைப்பற்றி வைத்திருந்த அந்த பெண்ணின் ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், அடைவு பத்திரங்கள் என்பவற்றை மீட்டுக் கொடுக்கிறார்கள்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதமாற்ற கும்பலின் சதியால் தனக்கு இந்த நிலைமை நேர்ந்ததை அப்போதுதான் அந்தப்பெண் உணர்ந்து கொள்கிறார். மீண்டும் சைவசமயம் திரும்புகிறாள் அந்தப் பெண்.
இந்த பிரச்சினைகளை அறிந்த புதுக்குடியிருப்பு சைவத் தமிழர்கள் அந்த பிள்ளைகளுக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றை பெற்றுக் கொடுக்கிறார்கள். அவரது வீட்டில் சாமிப்படம் இல்லாததையும் அவர் தாய் சமயம் திரும்பியதையும் அறிந்து அவர்கள் வீட்டில் சாமிப்படம் ஒன்றையும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
கொரோனா காலம், ஊரடங்கு தளர்த்திய சிலமணி இடைவேளை, அந்த ஏமாற்ற கிறிஸ்தவ மதமாற்ற கூட்டம் அந்த பெண்ணின் வீட்டிற்கு வருகிறது. தகாத வார்த்தைகளால் ஏசுகிறது. வீட்டிற்குள் புகுந்து சாமி அறையில் இருந்த சாமிப் படங்களை, விளக்குகளை உடைத்து காணி எல்லையில் உள்ள புற்றிற்குள் வீசுகின்றது.
பின் வீட்டிற்குள் வந்து பெரும் கூச்சலிட்டு செபம் என்ற பேரில் ஊளையிட்டு விட்டு செல்கிறது.அந்த வீட்டில் உள்ள சிறுமி கிராம அலுவலருக்கு தொலைபேசியில் அழைத்து நடந்ததைச் சொல்கின்றாள்.
முன் சொன்ன இரண்டு கிராம அலுவலர்களும் சில நிமிடங்களில் அந்த வீட்டிற்கு செல்கின்றனர்.அரச அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், இந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என்று சகலருக்கும் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் யாரும் வரவில்லை. அழைத்தும் வாராத அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவியிலும் இல்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று முறைப்பாட்டை பதிவு செய்கின்றனர் அந்த சைவத் தமிழ் உணர்வார்கள். கத்தோலிக்க மத போதகர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கைது செய்யப்படுகின்றனர்.
ஆனால் கொரோனா நிலையை காரணம் காட்டி விடுவிக்கப் படுகின்றனர் அந்த போதகரும் உதவியாளரும். ஆனால் கத்தோலிக்க மதத்தின் அழுத்தம் காரணமாகவே விடுவிக்கப்பட்டனர்.
பின்பு அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று மிரட்டல்கள், பேரம்பேசல்கள், மீண்டும் விலைபேசி மதமாற்றம் செய்ய ஏற்பாடுகள் என பல நடைபெற்றது. ஆனால் அந்த பெண் மாறவில்லை, வீட்டின் அருகில் ஒரு சிறு கோயிலை அமைத்து வழிபட்டும் வருகின்றார்.
ஆனால் தமிழ்மகளுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு, தமிழ் சமயத்திற்கு நேர்ந்த நிந்தனைக்கு இன்றுவரை நீதி கிட்டவில்லை.
கொரோனா ஊரடங்கு நீங்கி பலமாதங்கள் கடந்தபோதும் பிரச்சினை பொலிஸ் நிலையம் கடந்து நீதிமன்றம் செல்லவில்லை.தமிழ் சமயத்தின் இறை படத்தை உடைத்த கத்தோலிக்கத்தின் மேல் நடவடிக்கை ஏதும் இல்லை.
காலம் எல்லாவற்றிற்கும் பதில்களை வழங்கிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறே உயிர்த்த ஞாயிறு பலிபூசை தினமும் சில உண்மைகளை உணர வைத்துக் கொண்டே நிற்கின்றது. சிவ பார்வைகள் படரும்
No comments:
Post a Comment