Thursday, 11 March 2021

தமிழ்தேசியத்தின் மரபு அல்லது பாரம்பரியம் .

தமிழ்தேசியத்தின் தமிழர் பண்பாடு என்பது தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் சைவபண்பாடுகளுடன்,  நாட்டுப்புறவியல் மரபுகளோடு இணைந்த  கலாச்சாரம், சைவ நாகரீக பண்பாட்டின் குறியீடுகள் அனைத்தும் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட  தமிழர் மரபு ஆகும். இந்த தமிழர் மரபுகள் அனைத்தும் தமிழ்தேசியத்தின் குறியீடுகள். 

வேறு எந்த தேசியத்தின் அடையாளக் கூறுகளுக்கு இல்லாத பெருமை தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளுக்கு உண்டு.காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனைகற்றுக் கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது என்று தானே அர்த்தம்.

பண்பட்ட மண்ணில்தான் செடிகளும் கொடிகளும் துளிர்விடும். அதுபோல இந்தச் சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. 

நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டை கட்டிக் காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு.இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழரின் பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது. நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்து  தமிழ்தேசியமாக வருகின்றது.




No comments:

Post a Comment